· தமிழக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 64வது பிறந்த நாள் சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் நேற்றுமாலை கொண்டாடப்பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தலைமை தாங்கி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு, பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிகழ்ச்சியை தொடர்ந்து மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறும் இடங்களில் எங்கள்கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள், தாக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழகமீனவர்கள் பிரச்சினையில் நாங்கள் இரட்டைவேடம் போடுவதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். மீனவர் நலனுக்காக தொடர்ந்துபோராடும் ஒரேகட்சி பா.ஜனதா தான். அவர் கடிதம் எழுதுவதை தவிர என்ன நடவடிக்கை எடுத்தார்.
வாபஸ்பெற்ற எங்கள் கட்சி வேட்பாளரை தன்கட்சியில் இணைத்தார். இப்போது மக்களை திசைதிருப்ப பார்க்கிறார். பா.ஜ.க பலம்வாய்ந்த கட்சியாக மாறிவிடும் என்று அவர் பயப்படுகிறார்.
பா.ஜனதா தமிழகத்தில் புதியமாற்றத்தை உருவாக்கும். அந்தவகையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதேநேரத்தில் ஜம்முகாஷ்மீர் மக்களுக்காக நிதி திரட்டிதாருங்கள் என்று கூறியிருக்கிறார். ஆகவே தமிழக பா.ஜ.க சார்பில் இன்னும் 5 நாட்களுக்கு நிதி திரட்டி அனுப்ப இருக்கிறோம்.என்று அவர் கூறினார்.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.