மகாராஷ்டிரத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்

 மகாராஷ்டிரத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். இத்தேர்தலில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் போட்டியிட்டு, வெற்றிபெறுவோம், லோக்பால், மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணையம் உள்ளிட்ட சட்டப் பூர்வ அமைப்புகளுக்கான நியமனங்களில் மத்திய அரசு விதிமுறைகளின்படி செயல்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

லோக்பால் உள்ளிட்ட அமைப்புகளுக்கான தலைவர், உறுப்பினர்களை தேர்வுசெய்யும் குழுவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. எனினும், மக்களவையில் தேவையான எம்.பி.க்களின் பலம் காங்கிரஸக்கு இல்லை என்பதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கவில்லை.

இந்நிலையில், லோக்பால் அமைப்புக்கான தலைவர், உறுப்பினர் பதவிக்கான நியமனங்கள் நிலுவையில் இருப்பதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் , ""இந்த நியமனங்களில், விதி முறைகளின்படி நாங்கள் செயல் படுவோம்'' என்று அவர் பதிலளித்தார்.

மேலும் சிவசேனையுடனான கூட்டணி முறிவு குறித்தும் அக்கட்சியைச்சேர்ந்த அமைச்சர் அனந்த் கீதே அமைச்சரவையில் தொடர்வது குறித்தும் அவர் கூறுகையில்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனையுடன் பாஜகவின் கூட்டணி முறிந்தது துரதிருஷ்டவசமானது. இந்தக்கூட்டணி தொடர்பாக நாங்கள் நீண்ட விவாதம் நடத்தினோம். எனினும் துரதிருஷ்டவசமாக அந்தப் பேச்சு வார்த்தைகள் பலனளிக்கவில்லை.

மத்திய அமைச்சரவையில் சிவசேனையை சேர்ந்த அனந்த்கீதே தொடர்வது குறித்து எங்கள் கட்சி இன்னும் முடிவு செய்ய வில்லை. அதுகுறித்து நாங்கள் இன்னும் விவாதிக்கவில்லை.

சிவசேனையுடனான கூட்டணியில் இருந்து விலகிய போதிலும், மகாராஷ்டிரத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். இத்தேர்தலில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் போட்டியிட்டு, வெற்றிபெறுவோம்.

மகாராஷ்டிர பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் நிதின்கட்கரி முதல்வராகும் வாய்ப்பு குறித்து கேட்கிறீர்கள். பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் அரசுக்கு தலைமை தாங்குவது யார் என்பதுகுறித்து கட்சியின் ஆட்சிமன்ற குழு முடிவு செய்யும் என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...