11 முன்னணி தொழிலதிபர்களை காலை உணவின்போது சந்தித்து பேசிய மோடி

 அமெரிக்காவின் 11 முன்னணி தொழிலதிபர்களை, காலை உணவின்போது பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திப் பதற்காக வாஷிங்டன் செல்வதற்கு முன்பாக, நியூயார்க்கில் இன்று காலை அமெரிக்காவின் 11 முன்னணி தொழிலதி பர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

காலை உணவின்போது இந்தசந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில், கூகுள் நிறுவனத்தின் எரிக்ஸ்மித், பெப்சி நிறுவனத்தின் இந்திராநூயி, கார்லே நிறுவனத்தின் டேவிட் ருபன்ஸ் டெயின், சிட்டிகுரூப் நிறுவன தலைவர் மிக்கேல் கோர்பட், கேட்டர்பில்லர் நிறுவனத்தின் டக் ஓபரல்மென், ஹாஸ்பிரா நிறுவனத்தின் மிக்கேல்பால், மெர்க் அண்டு கோ நிறுவனத்தின் பிரேசியர் உள்ளிட்டோரும் அடக்கம்.

இதுதவிர, முக்கிய 6 முக்கிய நிறுவன தலைவர்களான, போயிங் நிறுவன தலைவர் ஜேம்ஸ்மெக் நெர்னி ஜூனியர், பிளாக்ராக் நிறுவன தலைவர் லாரன்ஸ் பிங்க், ஐபிஎம்., நிறுவவனத்தின் தலைவர் கின்னி ரோமெட்டி, ஜெனரல் எலக்ட்ரிகல் நிறுவன தலைவர் ஜெப்ரி இமெல்ட், கோல்டு மென் சாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லாய்ட் பிளான்க் பெயின், கோல்பெர்க் கிராவிஸ் ரோபர்ட்ஸ் நிறுவன தலைவர் ஹென்ரி கிராவிஸ் ஆகியோருடன் மோடி, 15 முதல் 20 நிமிடநேரம் தனித்தனியே சந்தித்து பேசினார்.

இந்நிறுவன தலைவர்களுடன் மோடி பேசும்போது, ஆசியாவிலேயே இந்தியாதான் முதலீட்டுக்கு ஏற்ற இடம் என்றும், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்திதுறையில் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...