அதிமுக.வினர் வார்த்தைகளை அளந்துபேச வேண்டும்

 பிரதமர் நரேந்திர மோடி குறித்து தவறாக விமர்சனம் செய்வதை நிறுத்துவதுடன், அதிமுக.வினர் வார்த்தைகளை அளந்துபேச வேண்டும் என்று பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வானொலி மூலம் நாட்டுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஏழைநெசவாளிகள் குடும்பத்தில் விளக்கேற்ற அனைவரும் காதிபொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளை பொது மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில், பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காதிகிராமோத் யோக்பவன் கடையில் நேற்று கைத்தறி ஆடைகளை வாங்கினார். .

அதனை தொடர்ந்து, பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சாமானிய மக்களிடம் கருத்துசெல்லும் வகையில் வானொலியில் உரையாற்றினார். பொதுவாகவே தலைவர்களின் வானொலி உரை என்பது சரித்திரம்வாய்ந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வானொலி மூலம் மக்களிடம் தொடர்பு கொள்வதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.

காதி பொருட்களை வாங்கி ஏழைநெசவாளிகள் குடும்பத்தில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, நாங்களும் இனி வாரத்தில் ஒருநாளாவது காதி உடைகளை அணிவோம்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை எப்படி இருக்கிறது?'' என்று கேள்விக்கு. பதில் அளித்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிச்சயம் பாதிக்கப் பட்டுள்ளது. பல இடங்களில் கட்டாயப்படுத்தி கடைகளை அடைக்கவும், போராட்டம் நடத்தவும் சொல்கிறார்கள்.

ஒருகட்சியின் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், தொண்டர்கள் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் போராட்டம் நடத்தவேண்டும். அதிமுக.வினர் நடத்திய போராட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி இழிவாக விமர்சனம் செய்து பேசியுள்ளனர்.

அதிமுக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட விஷயத்தில், நீதி தனது கடமையை செய்திருக்கிறது. எனவே, அ.தி.மு.க. வினர் வார்த்தைகளை அளந்துபேச வேண்டும். பிரதமரை பற்றி தவறான விமர்சனங்கள் செய்வதை ஏற்கமுடியாது.

தமிழகத்தில் இனி காங்கிரஸ் கட்சியால் தான் வேரூன்ற முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அது தவறு. தமிழகத்தில் மாற்று சக்தியாக பாஜக. உருவெடுத்துள்ளது. அதை உள்ளாட்சி இடைத் தேர்தலிலேயே நாங்கள் நிரூபித்துள்ளோம். தூய்மையான கட்சியாக பாஜக. விளங்கிவருகிறது.

'சுத்தமான பாரதம்' என்ற கோஷத்தை பிரதமர் நரேந்திர மோடி மக்கள் முன் வைத்துள்ளார். அதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு அளித்ததுடன் 90 லட்சம்பேரை பங்கேற்க செய்வதாகவும் கூறியுள்ளார். அவருக்கு பாஜக. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...