கழிப்பறைகள் பயன்பாட்டை நாட்டுமக்களிடையே பழக்கமாக மாற்றவேண்டும்

 கழிப்பறைகள் பயன்பாட்டை நாட்டுமக்களிடையே பழக்கமாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தர வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு சார்பில் நாடுமுழுவதும் "தூய்மை இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக மத்திய குடிநீர், துப்புரவுத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நம் நாட்டில் அதிகளவு கழிப்பறைகளை கட்டமைத்தால் மட்டுமே, 2019-ஆம் ஆண்டுக்குள் "தூய்மை இந்தியா' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய குடிநீர், துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. "கழிப்பறைகளைப் பயன் படுத்துவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளும் வகையில் அதற்கான முயற்சிகளுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தர வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அத்துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், "மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தூய்மை இந்தியாதிட்டம் மூலம் கழிப்பறைகளை கட்டுவதன் அவசியம், அவற்றின் பயன்பாடு ஆகியவை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தமுடியும். இது தவிர சுகாதார பணிகளில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தவும் மத்திய அரசு முடிவசெய்துள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்களை பயன் படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, கழிப்பறைகளை மக்கள் பயன் படுத்துவதை பழக்கமாக மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதற்குமுன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.

கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், "நாட்டில் புதிதாக மூன்றுலட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தாலும், அவற்றில் 10,000 மட்டுமே மக்கள் பயன்பாட்டில் உள்ளது. எஞ்சியுள்ள கழிப்பறைகளில் உரிய தண்ணீர்வசதி இல்லை. இதனால், அவற்றை மக்கள் வேறு செயல்களுக்குப் பயன் படுத்தி வருகின்றனர்' என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...