தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும்கட்சியாக பாஜக திகழும்

 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிப்பு, திமுக மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி போன்றவற்றால் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும்கட்சியாக பாஜக திகழும் என்று மேலிடப் பொறுப்பாளர், முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிலதலைவர்கள் விடுக்கும் கோரிக்கை பற்றி கருத்துக்கூற பாஜக விரும்பவில்லை. மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் திமுகவுக்கு காணப்பட்ட அதிருப்தி இப்போதும் தொடருகிறது. ஒருபுறம் ஜெயலலிதா சிறையில் இருப்பது, மறுபுறம் தி.மு.க.,வுக்கு எதிரான அதிருப்தி நிலை ஆகியவை தொடர்வதால் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநிலத்தில் பாஜக.,வை பலப்படுத்தி வெற்றிடத்தை நிரப்பும்கட்சியாக பாஜக திகழும்.

2016ல் முக்கியப்பங்கு வகிக்கும்: 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும் வகையில், பாஜகவை வழி நடத்திச் செல்லக் கூடிய தகுதிவாய்ந்த தலைவர்களைக் கண்டறிந்து வருகிறோம். தமிழகத்தில் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக முக்கியப்பங்கு வகிக்கும்.

மக்களவைத் தேர்தலின் போது தமிழகத்தில் தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் மேற்கொண்டிருந்த நல்லுறவு இப்போதும் நீடித்துவருகிறது என்றார் முரளிதர் ராவ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...