மானேஸர்:அருணாசலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள மக்மோகன் எல்லைப்பகுதியில் சாலை அமைக்கும் இந்தியா திட்டமிட்டுள்ளதற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவை எந்தநாடும் மிரட்டவோ, எச்சரிக்கை விடுக்கவோ முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அருணாசல பிரதேச மாநிலத்தில், சீனாவை ஒட்டியுள்ள மக்மோகன் எல்லைக்கோட்டுப் பகுதியில், தவாங்க் மாவட்டத்தில் உள்ள மகோ திங்க்புவில் இருந்து, சங்லாங் மாவட்டத்தில் உள்ள விஜய நகர்வரை ரூ. 40,000 கோடியில் சுமார் 2,000 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சீன வெளியுறவு துறைச் செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ, பெய்ஜிங்கில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, இந்தியா-சீனாவின் கிழக்குப்பகுதி இடையே எல்லைப் பிரச்னை உள்ளது; ஆகையால் இதற்குத் தீர்வுகாண்பதற்கு முன்பாக அங்கு சாலை அமைப்பது போன்ற நடவடிக்கையில் இறங்குவது கடும் விளைவுகளை உருவாக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரியானா மாநிலம், மானேஸரில் என்எஸ்ஜி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம்:
இந்தியா தற்போது மிகவும் பலம்வாய்ந்த நாடு.அதற்கு எந்த நாடும் எச்சரிக்கை விடுக்கமுடியாது. . இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு இருநாடுகளும் அமர்ந்து பேசி, தீர்வுகாண வேண்டும்'' என்றார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.