மறைமுக அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய விமானப் படை தளபதி அரூப் ரகா, கடற்படை தளபதி ஆர்.கே.தோவான், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்றுவிரிவான ஆலோசனை நடத்தினார். எல்லை பிரச்னை, பயங்கரவாதி கள் நடமாட்டம், பாக்., – சீன ராணுவத்தினரின் கொட்டத்தை அடக்குவது ஆகிய பிரச்னைகள் குறித்து, இந்த கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட்டது. அல் – குவைதா, ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆகிய பயங்கரவாத அமைப்புகளால், நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், இதில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, நம் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தில்லியில் முப்படை தளபதிகளின் மாநாடு வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, முப்படைத் தளபதிகளையும் அவர் முதல்முறையாக அப்போது கூட்டாக சந்தித்தார். மாநாட்டில் மோடி பேசியதாவது:
இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி க்கான இலக்குகளை எட்டுவதற்கு அமைதி, பாதுகாப்புடன் கூடிய சூழல் முக்கியம் . சாதகமான வெளியுறவு சூழலை உருவாக்குவதிலும், இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்து வதிலும் எனது அரசு கவனம்செலுத்தி வருகிறது.
நமக்கு பரிச்சயமான, வழக்கமான சவால்களோடு, மாறிவரும் உலகையும் சந்திக்க இந்தியா தயாராகவேண்டும். இதற்கு, பொருளாதார கொள்கைகளிலும், பாதுகாப்பு கொள்கைகளிலும் நமக்குப்புதிய சிந்தனை தேவைப்படுகிறது. முழுஅளவிலான போர்கள் நடப்பது அரிதாகி இருக்கலாம். ஆனால், முப்படையானது (எதிரிகளை) தடுக்கும் கருவியாக தொடர்ந்து நீடிக்கும். அது மற்றவர்களின் அணுகு முறை மீது தாக்கத்தை கொண்டிருக்கும். மாறிவரும் உலகில், கணிக்கவே முடியாத மறைமுக எதிரியையும், மறைமுக சவால்களையும் சந்திக்க முப்படைகளும் தயாராக இருக்கவேண்டும். பாதுகாப்பு சவால்களை கணிக்க இயலாததொரு எதிர் காலத்தை நாம் எதிர் கொண்டுள்ளோம். சூழ்நிலைகள் அடிக்கடிமாறலாம்.
இணையவெளி மீதான ஆதிக்கமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும். நிலம், வான், கடல்போலவே விண்வெளி மீதான கட்டுப்பாடும் முக்கியமானதாக மாறும்.
இந்திய பாதுகாப்பு படைகளை சீரமைக்க வேண்டியது அவசியம். படையினரின் முழுமையான ஆயத்தநிலையை உறுதிப்படுத்துவதற்காக போதுமான வளங்களை வழங்கவும், குறைபாடுகளை களையவும், நவீனமயத்துக்கான தேவைகளைச் சந்திக்கவும் உறுதி பூண்டுள்ளேன்.
உலகம் தற்போது இந்தியாவை ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் கவனிக்கிறது. உலக பொருளாதாரத்தின் தூண்களில் ஒன்றாக மட்டுமன்றி, பிராந்திய, உலக பாதுகாப்புக்கான நங்கூர மாகவும் இந்தியாமாறும் என்ற எதிர்பார்ப்பு உலகளவில் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகள் தங்கள் கொள்முதல் நடைமுறைகளில் சீர் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும், உள்நாட்டிலேயே பாதுகாப்பு சாதனங்களை வடிவமைப்பதிலும், தயாரிப்பதிலும் ஏற்படும் தாமதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். முப்படைகளும் வளங்களைப் பயன் படுத்துவதில் சிக்கனம், திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மோடி.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.