மகாராஷ்ட்டிராவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல பாஜ.க முதல்வர் யாராக இருந்தாலும் தேரை இணைந்து இழுக்க தயாராக இருப்பதாக கூறி, பா.ஜ.,வுக்கு முழு ஆதரவு தர சிவசேனா முன்வந்துள்ளது. இதையடுத்து, மகாராஷ்ட்டிராவில் பா.ஜ.க,- சிவசேனா கூட்டணி ஆட்சி உருவாக பிரகாசமான வாய்ப்பு உருவாகி உள்ளது.
சிவசேனாவின் அதிகார பூர்வ பத்திரிக்கையான சமானாவில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது : மகாராஷ்ட்டிராவை பிரிவினைகளால் உடைந்துபோக நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மக்கள் அளித்த ஆதரவும், ஆசியும் வீணாக போகக் கூடாது. இம்மாநிலத்தில் நிலையான ஆட்சிவேண்டும் என்பதே எங்களின் நோக்கம். மகாராஷ்ட்டிராவில் பா.ஜ., தரப்பில் யார் முதல்வராக தேர்வு செய்யப் பட்டாலும், அவரது தலைமையில் மகாராஷ்ட்டிர வளர்ச்சிக்கான தேரை இழுத்துசெல்ல தயாராக இருக்கின்றோம். வருங்கால முதல்வர் மக்களின் ஒருமைப் பாட்டுக்கு துணையாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.