ஜம்முகாஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் வரும் நவ. 25 முதல் டிச.20 வரை ஐந்து கட்டங்களாக சட்ட மன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதல்வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதன்படி ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் போட்டியிடும் 45 வேட்பா ளர்கள் பட்டியலும், ஜார்கண்டில் போட்டியிடும் 63 வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிட பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.வில் சில காலங்களுக்கு முன் சேர்ந்த லால்சிங்கிற்கு பாசோஹ்லி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மூன்று மணிநேர ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வரான அர்ஜுன் முண்டாவுக்கு கர்சவான்(தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அம்மாநில முன்னாள் துணை முதல்வர் ரகுவர்தாசுக்கு ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அம்மாநில பாஜக. துணை தலைவரான சீமா சர்மாவுக்கு ஹட்டியா தொகுதியில் போட்டியிடவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை பள்ளத்தாக்கு பகுதியான காஷ்மீரில் 11 வேட்பாளர்களையும், லடாக்பகுதியில் 2 வேட்பாளர்களையும், ஜம்மு பகுதியிலிருந்து 32 வேட்பாளர்களையும் பாஜக. களமிறக்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் பாஜக. பொதுச் செயலாளர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, அனந்த்குமார், தாவர் சந்த் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.