பா.ஜ.க.,வுக்கு ஜி.கே.வாசன் வந்தால் வரவேற்போம் என்று பொள்ளாச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..
பொள்ளாச்சி தொழில் அதிபர் நா.மகாலிங்கம் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் உள்ள அவரது இல்லத்துக்கு மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். அங்கு மகாலிங்கம் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியை பொருத்த வரை அந்த கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே கோஷ்டிபூசலும் தொடர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் செல்வாக்குபெற்ற ஒருவரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது தமிழக காங்கிரஸ்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள இளங்கோவனுக்கு எனது வாழ்த்துகள்.
காங்கிரசில் இருந்து பிரியும் ஜிகே.வாசன் பா.ஜ.க.,வுக்கு வந்தால் நாங்கள் வரவேற்பதுடன், மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம். மூப்பனாரால் தமிழ்மாநில காங்கிரஸ் உருவாகிய போது இருந்த நிலைமை வேறு, தற்போதைய நிலைமை வேறு. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க புத்துணர்ச்சியுடன் வலுப் பெற்று வருகிறது. மத்தியில் மோடி அரசு பதவி ஏற்றவுடன் தமிழகமீனவர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இலங்கை சிறையில் இருந்த 500-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன், அவர்களது படகுகளையும் மீட்டுள்ளோம்.
தற்போது தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு தூக்குதண்டனை விதித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக நீதிமன்றத்தில் அப்பீல்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக இந்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.