ஜி–20 உச்சி மாநாடு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது

 3 நாடுகளில் பத்து நாள் பயணம்செய்து, உலக தலைவர்களை சந்தித்த போது பேசியது என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது வலைத்தளத்தில் அவர் கூறி இருப்பதாவது:–

கருப்புபணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பது குறித்தும், அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது பற்றியும் உலக தலைவர்களிடம் இந்தியா எடுத்துவைத்தது. இந்த பிரச்சினை, ஒருநாட்டை மட்டுமே பாதிக்காது என்ற நிலையில், உலக தலைவர்கள் கவனத்தில் கொண்டது, எனக்கு மகிழ்ச்சியை தந்தது.

கருப்பு பணத்தை பொறுத்த மட்டில், அது உலக அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர் குலைத்து விடும். கருப்புபணம், பயங்கர வாதம், சட்ட விரோத பண பரிமாற்றம், போதைப் பொருள் வணிகம் ஆகியவற்றுக்கும் காரணமாகி விடும்.

இந்த பிரச்சினைக்கு எதிராக உலகளாவிய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஜனநாயக நாடுகள் என்ற முறையில், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு, கருப்புபணம் என்ற சமூக தீமைக்கு எதிராக அனைவரும் கூட்டாக போராடவேண்டிய கடமை உண்டு என்பதை சுட்டிக்காட்டுவதற்கு ஜி–20 உச்சி மாநாடு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

இந்தமாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில், இந்த பிரச்சினை குறித்து குறிப்பிட்டிருப்பது, நாம் வைத்த கோரிக்கைக்கு கிடைத்தவெற்றி ஆகும்.

எனது பயணத்தின் போது, இந்தியா மீதான தங்களது மதிப்பை மிகுந்த எழுச்சியுடன் உலகம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் கண்டேன். இந்தியாவுடன் இணைந்து செயல்பட உலகசமுதாயம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதையும் என்னால் பார்க்கமுடிந்தது.

ஒவ்வொரு தலைவரை சந்தித்த போதும், நமது உறவினை இன்னும் ஆழமாக, விரிவாக கொண்டுசெல்வது குறித்து விவாதித்தோம். வணிகத்தை, வர்த்தகத்தை மேம்படுத்த ஆலோசித்தோம். இந்தியாவுக்கு தொழில் நிறுவனங்களை கொண்டுவர அழைப்பு விடுத்தேன். இதுதான் எங்கள் சந்திப்புகளில் முக்கியபங்கு வகித்தது.

இந்தியாவில் தயாரிப்போம் என்னும் நமது திட்டம்குறித்து நான் சந்தித்த தலைவர்களில் பலரும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் இந்தியாவரவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை ஒருசாதகமான அறிகுறியாக நான் பார்க்கிறேன். இந்தியாவின் இளைய தலை முறையினருக்கு அவர்கள் வாய்ப்புகளை கொண்டுவருவார்கள். அவர்கள் ஒளிர்வதற்கான சரியான வாய்ப்பாக அது அமையும்.

உலகின் ஒவ்வொருபகுதி தலைவரையும் சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். அவர்களுடனான எனது சந்திப்பு திறந்தமனதுடன் கூடியதாகும். அது மட்டுமல்லாது, நல்லபலனையும் தந்துள்ளது.இவ்வாறு அதில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...