ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழலும், சட்டம் ஒழுங்கும் மலிந்து விட்டது

 முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் மலிந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையை அடுத்துள்ள கோவில் பாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சிமுகாம் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடுமுழுவதும் பாஜக-வில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. 18002662020 என்ற எண்ணில் மிஸ்டுகால் கொடுத்து உறுப்பினராக இணைந்துக் கொள்ளும் திட்டத்தின் மூலம், லட்சக் கணக்கானோர் தங்களை பாஜக-வில் இணைத்துக் கொண்டுள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாஜக-வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

அனைத்துப் பிரச்சினைகளிலும் மத்திய அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஓ. பன்னீர் செல்வத்தின் ஆட்சியில் ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினை மலிந்துவிட்டது.

வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் குறித்து துதிபாடாமல், மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு அதிகாரத்துடன் செயல்படவேண்டும்.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் விதத்திலான அவிநாசி-அத்திக்கடவு, பாண்டியாறு-புன்னம்புழா உள்ளிட்ட திட்டங்களை செயல் படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆழ் கடல் மீன் பிடிப்புத் திட்டத்தை பெற்றுத்தர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...