சிறந்த ஆங்கிலபுலமையும், உலக அறிவையும் பெற்றுள்ள நாகாலாந்து இளைஞர்களை சிறந்தமுறையில் உபயோகப்படுத்த உள்ளோம் எனவே வட கிழக்கு மாநில மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை வழங்க முடிவு செய்திருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து, கோகி மாவில் நடைபெறும் 10 நாள் ஹார்ன் பில் திருவிழாவை, அம்மாநிலத்தின் பாரம்பரிய தலைப்பாகை அணிந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து விழாவில் பேசியதாவது,
நாகாலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடம். வட கிழக்கு மாநில மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்களை மேம்படுத்தி, அப்பகுதியின் வளர்ச்சிக்கு பயன் படுத்தப்படும். சிறந்த ஆங்கிலபுலமையும், உலக அறிவையும் பெற்றுள்ள நாகாலாந்து இளைஞர்களை சிறந்தமுறையில் உபயோகப்படுத்த உள்ளோம்.
நாட்டின் பிறபகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள ஏராளமான சுற்றுலாபயணிகள் இங்கு உள்ளனர். இது சிறந்த சுற்றுலாதளம். இப்பகுதிக்கான தொடர்புகள்தான் பிரச்சனையாக உள்ளது. இப்பகுதிக்கு சாலை, ரயில், விமான போக்கு வரத்தை அமைக்கும் வரை இம்மாநிலத்தையோ, சுற்றுலா துறையையோ மேம்படுத்துவது கடினம். எனவே இங்கு 14 ரயில்பாதைகள் அமைப்பதற்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து புறப்பட்டால், சிலமணி நேரங்களில் வந்து சேரக்கூடிய மாநிலமாக நாகாலாந்து உள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இங்கு ஒரு பிரதமர்கூட வரவில்லை. நான் இப்போது வந்திருக்கிறேன். இனி, அடிக்கடிவருவேன். நாகாலாந்து இயற்கை செழுமைமிகுந்த ஒரு மாநிலம். இதன் காரணமாக, ஏராளமான முதலீட்டாளர்கள் சுற்றுலா துறையில் முதலீடுசெய்ய இங்கு நிச்சயம் வருவார்கள். நாட்டின் பல நகரங்களில் சிறப்புபொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நாகாலாந்து மாநிலத்தின் இயற்கைவளத்தின் அடிப்படையில், இங்கு இயற்கை பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மற்ற மாநிலமக்கள் இயல்பாக பழகும் வகையில், விடுமுறை காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 2000 மாணவர்கள் மற்றும் 500 ஆசிரியர்கள், நாட்டின் பிறபகுதிகளுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.