வையகம் தழைக்க வளரும் ஆர்.எஸ்.எஸ்.

 ஆர்.எஸ்.எஸ். என்றாலே தினசரி சந்திப்பது (ஷாகா) என்பது அதன் தனித்தன்மை. கடந்த ஆண்டைக் காட்டிலும் 4500 ஷாகாக்கல் அதிகரித்துள்ளது. இவைகளில் 18௦௦ புதிய இடங்களாகும். 'மிலன்' என்று அழைக்கப்படுகிற வாராந்திரக் கூடுதல்களும் 2,650 அதிகரித்துள்ளது. நாடெங்கிலும் தற்போது 43,748 (ஷகாக்கள்) தினசரி சந்திப்புக்கள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ஆந்திராவில் 'ஹூட் ஹூட்' புயல் வீசித் தாக்கியபோது அம்மாநிலத்தின் மாவட்ட அளவிலான ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களின் கூட்டம் திருப்பதியில் நடிபெற்றுக் கொண்டிருந்தது. இருந்தபோதிலும் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் புயல் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

புயல் நிவாரண பணியில்

எங்கும் மின்சாரம் இல்லை. எங்கு தேடினாலும் சாப்பிட உணவு கிடைக்கவில்லை. அதைவிடத் துயரம் குடிநீர் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. அனால் நகரெங்கும் தண்ணீர் மாயம். உடனடியாக நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து 3௦,௦௦௦ மெழுகுவர்த்தி, லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் பாக்கெட்டுகள், பால், பால்பவுடர், பிஸ்கட், உணவுப் பொட்டலங்கள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு ஸ்வயமசேவகர்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

உலகமெங்கும் ஹிந்து ஒற்றுமை

தற்சமயம் 36 அயல் நாடுகளில் மொத்தம் 636 கிளைகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 9 நாடுகளில் 13 இடங்களில் பண்புப் பயிற்சி முகாம்கள் நடைபெற்றன.இவற்றில் மொத்தம் 571 பேர் பயிற்சி பெற்றனர். மேலும் மகளிர் முகாம்கள் 10 இடங்களில் நடைபெற்றன.

அமெர்க்காவில் குரு வந்தனம்

'குரு வந்தனம்' செய்வது, குருவைப் போற்றுவது நமது நாட்டில் இயல்பானது. ஆனால் அமெரிக்காவிலும் நமது இந்த பண்பாடு பரவுகின்றது. இவ்வருடம் அமெரிக்காவில் வசித்து வருகிற மாணவர்களால் சிறப்பாக 'குரு வந்தன' தினம் கடைபிடிக்கப்பட்டது. அங்கு 38 பகுதிகலில் படித்து வருகிற மாணவர்கள் ஒருங்கினைந்து இந்நிகழ்சியை நடத்தினர். அவர்கள் ஆசிரியர்களுக்கு பாரத பூஜை செய்து, ஆரத்தி எடுத்து குருவை வணங்கினர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வதித்தனர். 475 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். மொத்தம் 2,250 மாணவ,மாணவிகள் இந்த குருவந்தனம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

100க்கும் அதகமான கோயில் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கூட்டம்நடைபெற்றது.

இங்கிலாந்தில்

"பாரதத்தில் ஆர்.எஸ்.எஸ்." என்ற பெயரில் ஏற்பாடு செய்யபட்டிருத நிகழ்ச்சியில் அங்கு செயல்பட்டு வருகிற 40 அமைப்புகளிலிருந்து 150 பேர் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...