ஆயுவுக்குழுவை அமைக்காத்தற்கு அபராதம் என உயர்நீதிமன்றம் தந்த அதிரடியால் ஒருவழியாக சகாயம் ஆய்வுக்குழுவுக்கு உதவிசெய்ய வசதிகளைச் செய்துதர வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது. ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்
செயல்படும் தமிழக அரசு. இதற்கான உத்தரவு பிரப்பிக்கபட்டுள்ளபோதும், இது மதுரை மாவட்டத்துக்கு மட்டும்தான்! மற்ற மாவட்டங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா? எப்போது கிடைக்கும்? சகாயம் குழு மதுரையில் முதல்கட்ட ஆய்வைத் தொடங்குமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் இந்த விவகாரத்தில் நாமும் விசாரணையில் இறங்கினோம்.
கிரானைட் பிரச்சனை வெடிக்கத் தொடங்கிய மதுரை வட்டாரத்தின் நிலை பகீர் என்றிருந்தது. மதுரையில் குறிப்பாக மேலூர், வாடிப்பட்டி, ஒத்தக்கடை, கீழவளவு, புதுக்கோட்டையை ஒட்டிய பகுதிகளில் பெருவாரியாக கிரானைட் கற்கள் எடுக்கப்படுகின்றன. கிரானைட் எடுப்பது மட்டும் இல்லாமல் அந்தக் கற்களை பாலிஷ் போடுவது தொடங்கி அனைத்து வேலைகளையும் செய்யும் ஆலைகளையும் குவாரிக்காரர்களே நடத்துகிறார்கள். அதன்பின், இந்தக் கற்கள் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இதற்காக, 200 தனியார் கிரானைட் குவாரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் 175 குவாரிகள் மதுரையிலேயே இருக்கின்றன. 105 குவாரிகளில் மிகவும் மோசமாக சட்டத்தை மீறி, முறைகேடுகள் நடக்கின்றன. 51 குவாரிகளுக்கு அரசு, தனியார் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கீழையூரில் 22,௦௦௦ ப்ளாக்குகள் (granite blocks), கீழவளவு பகுதியில் 23,73௦ ப்ளாக்குகள் கிரானைட் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது, சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. பி.ஆர்.பி. கிரானைட்ஷ்தான் இவற்றில் பெரும்பான்மையச் செய்கிறது என்பது பகிரங்கக் குற்றச்சாட்டு.
அன்சுல் மிஸ்ரா கலெக்டராக இருந்தப்ப வழக்கு போட்டபின் மதுரையில் எந்த கிரானைட் குவாரிகளும் இயங்கவில்லை. ஆனால் அந்த குவாரியில் இயங்கிய வாகனங்கள் பொருட்கள் சீஸ் செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இவற்றை குற்றவியல் நீதிமன்றம் மூலம் திரும்ப நிறுவனத்துக்கே ஒப்படைக்கப்பட்டன. அந்த பொருட்கள் கொண்டு மதுரை சுற்றுவட்டார மாவட்டங்கள் மாற்றும் பகுதிகளில் பினாமி பெயர்களில் பி.ஆர்.பி., கிரானைட் குவாரிகளை வெட்டி வருகிறார்/ மதுரை டூ திருச்சி சாலையில் 15 கிலோமீட்டரில் தெற்குத் தெரு உள்ளது. அங்கு பி.ஆர்.பி.யின் பாலிஷ் போடும் ஏற்றுமதி ஆளை உள்ளது. அது ஆசியாவில் பெரிய கம்பெனி. இந்த ஆளை முல்லைப்பெரியாறு மடை திறந்த 13 கண்மாய் இவ்வழியாகப் போனதை அடைத்துவிட்டுதான் இங்கு ஆலையைக் கட்டியுள்ளனர்.
இது இல்லாமால் இங்கு பிரிட்டிஷ் காலத்தில் வேலை செய்த துணி துவைப்போர் சமூகம் உட்பட்ட ஒடுக்கப்பட சமூகத்தினருக்கு மானிய நிலங்கள் கொடுக்கப்பட்டன. அவை முழுவதும் இந்த்த கிரானைட் ஆலையால் அபகரிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இந்த பகுதியில் 9௦௦ ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டுள்ளது. (மதுரை மாவட்டம் மேலூர், தெற்குத்தெரு கிராம சர்வே எண்கள் 717/8, 718/4, 719/4, 737/4, 739/7, 739/9, 740/3, 741/4, 741/8 வழியாக செல்லக்கூடிய நேரடி பாசன வாய்க்காலில் சுமார் 1.18ஏக்கர் அளவிற்கு பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இப்படி பல ஏக்கர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.) நரசிங்கப்பட்டி, வெள்ளரிபட்டி,ஊருகால், மருதூர் இடையப்பட்டி பகுதிகளில் நீர் ஆதாரங்கள் விவசாயம் பதிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு பாசனத்தை நம்பியிருந்த 26 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலங்கள், இந்த கிரானைட் ஆலையால் பாதிக்கப்பாட்டுள்ளன. கழிவுநீர் கலப்பதால் மேலும் பாதிப்பு.
இது மட்டுமல்ல கீழையூர், கீழவளவு, ஈமலம் பட்டி, எடையப்பட்டி, திருவாதவூர் ஆகிய ஊர்களில் தலித் மக்களுக்கென வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் சுடுகாடுகள் ஆகியவையும் பறிக்கப்பட்டு கிரானைட் குவாரிகளின் பிடியில் உள்ளன. இந்த பாலிஷ் போடும் ஆலையின் உள்ளேயே புழுஉண்ட அய்யனார் கோயில் இருந்தது. அதை அழித்துவிட்டு தான் ஆளை காட்டிய்ள்ளனர். இந்த கோயில் தேவர், ஆதிதிராவிடர், கோனார் மூன்று சமுதாயத்தினரும் வழிப்பட்டு வந்த கோயில். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் எல்லைமுண்ட கோயில், நத்தத்தி ஆயி அம்மன் கோயில், பதினெட்டாம்படி கருப்பு கோயில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டுதான் அங்கு இந்த பேக்டரி கட்டப்பட்டது.மேலும் இசுலாமியர்கள் சக்கர்பீர் தர்காவும் பொக்கிசமலையில் இருந்ததை இடித்துவிட்டனர். முழுக்க அழிச்சுட்டாங்க. அதன் அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயிலையும் அழிச்சுட்டாங்க. அங்கெல்லாம் கிரானைட் எடுக்குறாங்க. பாண்டிய மன்னர் கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் கட்டிய குடவரக்கோயில் விகுதீஸ்வரர் ஆலயம் இருந்தது. அதையும் கிரானைட் குவாரிகளுக்காக அழித்துவிட்டனர் என கிரானைட் எடுப்பதற்காக செய்யப்பட அப்பட்டமான சட்ட விரோதங்களை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.
நீர்வளப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் மதுரை சோமசுந்தரம் நம்மிடம், "இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, கிரானைட் விவகாரத்தை தனி நீதிமன்றம் அமைத்தது விசாரிக்கணும்னு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டேன். நீதிமன்றம் உரிய உத்தரவு போட்டது. ஆனாலும் அரசு ஒன்றரை வருடம் ஆகியும், தனி நீதிமன்றம் அமைக்கவில்லை. இந்த நிலங்கள், கோயில்கள் அனைத்தையும் மீட்டு, நிலமற்ற அனைத்து சாதி ஏழை மக்களுக்கு அரசு பிரித்து வழங்கவேண்டும்" என்கிறார் ஆதங்கத்துடன்.
"மேலூர் தாலுகாவுல முழுக்க முழுக்க கிரானைட் குவாரி, முறைகேடுத்தான் நடக்குது. கிரானைட் அல்லினதுமட்டுமில்லாம, அதை அரசாங்கத்துக்குத் தெரியாம மூடியதும் சட்டவிரோதமே. மல்லபட்டி கிராமம் உள்பட பல இடங்கள்ல இப்படி நடந்திருக்கு. இப்படி மதுரைமாவட்டத்துல மட்டுமே சுமார் ஒன்றரை லட்சம் கோடி இந்த கிரானைட் முறைகேட்டுல கொல்லையடிச்சிருக்காங்க' என அதிர வைக்கிறார்கள் கிரானைட் வர்த்தகர்கள்.
"மதுரையில் நடந்த கிரானைட் கொள்ளை மட்டுமல்ல, தூத்துக்குடிப் பகுதியில் கார்னெட் மணல் கொள்ளையும் பகிரங்கமாக நடந்தது. அந்தப் பக்கம் சகாயத்தின் பார்வை திரும்பிவிடக் கூடாது என்பதற்காகதான் மதுரையை மட்டும் விசாரிக்கும் வகையில் தமிழக அரசு அறிவுத்துள்ளது" என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கார்னெட் அதிபர் வைகுண்டராஜனைக் காப்பாற்ற தமிழக அரசு அறிவித்துள்ளது" என்கிற சுற்றுசூழல் ஆர்வலர்கள், கார்னெட் அதிபர் வைகுண்டராஜனைக் காப்பாற்ற தமிழக அரசு தவிர்ப்பதன் பின்னனியும் சொன்னார்கள்.
2௦11-லிருந்து 2013 வரை கார்னெட் மணல் வியாபாரம் கொட்டிக் கொடுத்த லாபத்தில் 32 கம்பெனிகளில் வைகுண்டராஜனுடன் இணைந்து பார்ட்னராக செயல்பட்டிருக்கிறார் போயஷ் கார்டன் வாசியான இளவரசி. இவர்கள் இருவருமே தமிழகத்தில் அதிமுக்கிய பொறுப்பு வகித்தவரின் பினாமிகல்தான். இந்த 32 கம்பெனிகளின் விதிமீறல் விவகாரங்களை சகாயம் கையில் கோப்புக்காக கொடுத்திருக்கிறது மத்திய உளவுத்துறை. தமிழகத்தின் கனிமக் கொள்ளை முழுவதையும் வெளிக்கொண்டுவர நினைக்கும் சகாயம், கார்னெட் மணல் விசாரணையில் இறங்கிவிடக்கூடாது என்று பதறுகின்றனர் ஆட்சியாளர்கள். சகாயமோ, குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு பெரும் குளறுபடியாக இருக்கும் மதுரை கிரானைட் விவகாரத்தை ஆய்வு செய்வதைக் காட்டிலும் கார்னெட் மணல் கொள்ளை குறித்து ஆய்வு மேற்கொள்வதையே சரியான சவாலாக நினைக்கிகிறார் என்றெல்லாம் மத்திய உளவுத்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிகின்றன.
சகாயம் தலைமையிலான குழு தமிழகம் முழுவதும் நடக்கும் மணல் கொள்ளைகள் குறித்து விசாரித்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதுராக தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றதையும், அந்த மனு தள்ளுபடியான நிலையில் மீண்டும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததையும், அதுவும் தள்ளுபடியாகி ரூ.1௦,௦௦௦ அபராதம் கட்டவேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டும் மத்திய உளவுத்துறையினர் மடியில் கனம் இல்லையென்றால் இத்தனை பயம் எதற்கு? என்று நமுட்டுச் சிரிப்போடு சில விஷயங்களைச் சொல்கின்றனர்.
"சொத்துக்களைக் குவிப்பதற்கு 32 பினாமி நிறுவனங்களை ஜெயலலிதா உபயோகித்திருக்கிறார்' என்று நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் குரிப்பிடிருந்ததையே மேற்கோள் காட்டி நம்மிடம் பேசினார் ஓர் உளவுத்துறை அதிகாரி. அந்த 32 பினாமி நிறுவனங்களில் ஒன்றுதான் ரிவர்வே அக்ரோ ப்ராடட்ஸ் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்தின் மூலம் 1994-ம் ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 119௦ ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். 2௦௦3-லிருந்து இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார் வைகிண்டராஜன். இந்த வியாபாரத் தொடர்புதான் வைகுண்டராஜனை ஜெயா டி.வி.யின் பங்குகளை வாங்க வைத்தது; தேர்தல்களின் போதெல்லாம் அ.தி.மு.க. வுக்கு அள்ளி அள்ளி நிதி கொடுக்க வைத்தது: குறிப்பாக தென்மாவட்டங்களில் அக்கட்சிக்கு ஒரு பைனான்ஷியராகவே இருந்தது வைகுண்டராஜனை செயல்பட வைத்தது. 2003 முதல் 2009 வரை மிடாஸ் மற்றும் கியுரியோ நிறுவனங்களின் 87.21 சதவீத பங்குகளை வைகுண்டராஜனின் குடும்பம் வைத்திருந்தது. தனக்கும் தனது கட்சிக்கும் கிடைத்த ஆபத்பாந்தவனாகவே வைகுண்டராஜனை கருதினார்
ஜெயலலிதா. அத வைகுண்டராஜனின் தாது மணல் நிறுவனங்களின் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் நடவடிக்கை எடுக்க முற்பட்டால் விடுவாரா என்ன? உடனே இடமாற்றம் செய்யப்பட்டார் ஆஷிஷ்குமார். ககன் தீப்சிங் பேடி குழு தேரிக்காடு மணல் மேடுகளில் ஏறி இறங்கி ஆய்வு செய்து தயாரித்து அரசுக்கு அளித்த அறிக்கையை வெளியிட்டால், தங்கள் குட்டு வெளிப்பட்டு விடும் என்றுதானே அந்த அறிக்கையை வெளியிடாமல் புதைத்தே விட்டார்கள்/
மேல்மட்டத்தில்லிருந்து கீழ்மட்டம் வரை ஆட்சி, ஆதிகாரத்தில் இருப்பவர்களை எப்படி எல்லாம் வளைக்க முடியுமோ அந்த அளவுக்கு வளைத்து வைத்திருந்தார் வைகுண்டராஜன். பலமான இந்தப்பின்னணி, காவல் துறை, பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாடு வாரியம், வனத்துறை, கனிம வளத்துறை, அணுசக்தி துறை, வருமானா வரித்துறை, வணிக வரித்துறை என அனைத்துத்துறைகளிலும் தனது இஷ்டம் போல ஆதிகாரிகளை ஆட்டி வைப்பதற்கு வைகுண்டராஜனுக்கு பெரிதும் உதவியது.
தான் ஆடாவிட்டாலும் தன தசை ஆடும் என்பார்களே.. அது போலத்தான் வைகுண்டராஜன் விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் அதீத அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். நேர்மையானாவர் என பொது மக்கள் கொண்டாடும் சகாயம் தாது மணல் கொள்ளை குறித்து விசாரித்து விடக் கூடாது என்று அஞ்சுகின்றனர். அதனால்தான்,மதுரையில் மட்டும்.. அதுவும் கிரானைட் குவாரிகளை மட்டும் தமிழகம் முழுவதும் விசாரிக்கவிருந்த சகாயத்தின் எல்லையை வெகுவாக சுருக்கி விட்டனர்.
இந்த நெருக்கடிகளையெல்லாம் கடந்து சகாயம் குழு நிச்சயம் செயல்படும் என்பதுடன், தமிழகத்தில் மேலும் எங்கெங்கே கனிமவளங்கள் கொள்ளையிடப்படுகின்றன என்பது பற்றி சகாயம் கையில் நிறைய விவரங்கள் உள்ளன' என்கிறார்கள் அவருக்காக களமிரங்கியுள்ள சமூக நல ஆர்வலர்கள்.
நன்றி : நக்கீரன்
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.