மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு வந்தால் பாஜக கூட்டணியில் மீண்டும் ஏற்ப்போம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
இது குறித்து மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது; டிசம்பர் 20ம் தேதி சென்னைக்கு பாஜக.,வின் தேசிய தலைவர் அமீத்ஷா வருகிறார். அன்று மாலை சென்னையில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மறுநாள் 21-ம் தேதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்ருகிறார். உத்தரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றியை தேடித்தந்தவர் அமித்ஷா. தற்போது தமிழகத்தின் வெற்றிக்காக வருகிறார்.
வரும் 2016ல் பாஜக தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் அமித் ஷாவின் வருகை அமையும்.
தற்போது தமிழகத்தில் அதிமுக அரசு முடங்கியுள்ளது. சட்ட மன்றமும் செயல்படாமல் உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டாக உள்ளது. இதனால் மக்கள் மாற்று சக்தியை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்று சக்தியாக பாஜக இருக்கும்.
இதை பொறுக்க முடியாத சிலர் பாஜகவின் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் 2 சதவீதம் மக்கள் மட்டுமே மண்ணெண்ணெயை மூலம் சமையல் செய்கின்றனர். மற்றபடி வேறு வழியில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என தெரியவந்துள்ளது. இதற்க்கான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. ஆனால் அதற்குள் ஏழைகளுக்கான மண்ணெண்ணையை மத்திய அரசு நிறுத்தி விட்டது என அவதூறு கூறுகின்றனர்.
பாஜக தமிழுக்கு எதிரான கட்சி என சிலர் சில அமைப்பினர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோன்ற விமர்சனங்களால் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராரும் தடுக்க முடியாது.
மோடி சிறந்த மனிதர் என உலகமே பாராட்டுகிற வேளையில், வைகோ மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆனால் பாமக அப்படி அல்ல. அவர்களுடன் எங்களது கூட்டணி பலமாக உள்ளது
தூக்கு கயிற்றின் விளிம்பில் நின்ற 5 மீனவர்களை மத்திய அரசு மீட்டது. அதுபோல் மீனவர்களுக்கு என்றும் மத்திய அரசு துணை நிற்கும்.
ஆனால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் இரு நாடுகளின் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். அதையும் மத்திய அரசு விரைவில் செய்யும் என்றார்.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.