60 லட்சம் உறுப்பினர்களை சேருங்கள் மராட்டியத்தை போல தமிழகத்திலும் பாஜக. ஆட்சி

 வருகிற மார்ச் மாதத்திற்குள் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தால் மராட்டியத்தை போல தமிழகத்திலும் பாஜக. ஆட்சியை கொண்டுவருவேன் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உறுதி அளித்தார்.

தமிழகத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மாலை குரோம்பேட்டையில் நடைபெற்ற தமிழக பாஜக. மாவட்டநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் சேர்ப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீண்ட நாட்களுக்கு பிறகு பாஜக.விற்கு மக்கள்செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் நரேந்திர மோடி கிடைத்துள்ளார். தமிழகத்தில் இந்தசெல்வாக்கை பயன் படுத்தி பலமான இயக்கமாக பா.ஜ.க.வை மாற்ற வேண்டும். இதற்கு உறுப்பினர் சேர்ப்புபணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் பாஜக. உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

உறுப்பினர் சேர்ப்புபணிகளின் போது 'மிஸ்டு கால்' முறையை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உண்மையான உறுப்பினர்களை பதிவுசெய்ய முடியும். ஒரு எஸ்எம்எஸ். மூலம் ஒருமாவட்டத்தில் 1 லட்சம் உறுப்பினர்களை திரட்டி மாநாடு நடத்த முடியும்.

வருகிற மார்ச் மாதத்திற்குள் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அப்படி நீங்கள் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தால், எப்படி இந்தியாவில் உள்ள அனைத்து சக்திகளையும் திரட்டி மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டுவந்தேனோ, அதேபோல தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வருவேன்.

2014 பாராளுமன்ற தேர்தலில், எப்படி மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் பாஜக. வெற்றிபெற்றதோ, அதேபோல வருகிற 2019 தேர்தலில் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இதற்கு ஏற்றார்போல தீவிரமாக உறுப்பினர் சேர்ப்பு பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...