வருகிறார் நேதாஜி?

 'சுபாஷ் சந்திர போஷின் மரணம் மர்மங்கள் மறைக்கப்படுகிறதா?' என்று, 'புதிய தலைமுறை' இதழில் கட்டுரை வெளியான சில தினங்களில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. நேதாஜிக்கு உரிய மரியாதை கொடுத்தால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தத் தயார் என்று பாரதிய சுபாஷ் சேவா என்ற அமைப்பைச் சேர்ந்த அரவிந்த் பிரதாப் சிங் மற்றும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் அழகு மீனா இருவரும் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது 118 வயதாகும் நேதாஜியுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வக்கீல் சங்கத் தலைவர் பீட்டர் ரமேஷ்குமார், நேதாஜி சுபாஷ் சந்திபோஷ் தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள 41 இந்திய ஆவணங்களையும், 10 கே.ஜி.பி. ரஷ்ய ஆவணங்களையும் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 15-ஆம் தேதி நீதிபதி வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது.

பாரதீய சுபாஷ் சேனா அமைப்பின் அழகுமீனா அதிரடியாய் தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளுமாறு மனு செய்ததோடு, 'நேதாஜி போர்க் குற்றவாளி அல்ல. அவர் எப்போது இந்தியாவிற்குள் வந்தாலும் உரிய பாதுகாப்பைக் கொடுப்போம் என எழுத்துப்பூர்வமாக இந்திய மக்கள் முன்னிலையில் மத்திய அரசு சொல்லும் பட்சத்தில் நேதாஜியை கூட்டி வரத் தயார்' என்று சொல்லியிருக்கிறார்.

இது தொடர்பாக அருப்புக் கோட்டையில் இருக்கும் அழகு மீனாவை சந்தித்தபோது, நேதாஜி குறித்த சில வீடியோ ஆதாரங்களை, 'புதிய தலைமுறை' வார இதழ் செய்தியாளரிடம் காட்டினார்.
அந்த வீடியோவில் 'நேதாஜி வாருங்கள் நேதாஜி வாருங்கள்' என மக்கள் வரவேற்க… தனது ஆதரவாளர்களுடன் ஒருவர் நடந்து வருகிறார். அனைவரும் மாலையிட்டு வணங்குகின்றனர். பிறகு நீண்ட நேரம் அவர் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

"இதோ இந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது நேதாஜியைத்தான். இந்த வீடியோ 2012 அக்டோபர் 17-இல் எடுக்கப்பட்டது. மகான் சந்த் சாம்ராட் என்ற பெயரில் சாதுவாக நேதாஜி இருக்கிறார்" என ஆரம்பத்திலே அதிரடியைக் கிளப்பினார் அழகு மீனா.

'இது தவிர்த்து வேறு ஆதாரங்கள் இருக்கின்றனவா?' எனக் கேட்டோம் "நேரு இறுதிச் சடங்கில் நேதாஜி, சாமியார் வேடத்தில் நிற்கும்போது மவுண்ட் பேட்டன் நேதாஜியை காட்டி, 'யாரு அவர்?' என்று கேட்கும் வீடியோவும் இருக்கிறது. நேதாஜி சம்பந்தமான இந்த வீடியோக்கள் வேறு யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சில வீடியோக்களை ஐ.என்.ஏ.வைச் சேர்ந்த வீரர்கள் யாராவது வைத்திருக்கலாம்.

நேரு இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்ட சாது யார்? என்று அப்பொழுதே செய்தித்தாள்கள் கேள்வி எழுப்பி இருந்தன. 1964 மே 28-இல் நேரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மொட்டை போட்ட நேதாஜிக்கும் 1934-இல் நேதாஜி தந்தை இறந்தபோது மொட்டை போட்ட நேதாஜிக்கும் உருவ ஒற்றுமை அப்படியே பொருந்துகிறது. 2012-இல் நடந்த மாநாட்டில் எங்கள் அமைப்புத் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங், நேதாஜிக்கும் மாலையிட்டு வணங்கும் வீடியோவும் இருக்கிறது. இவை எல்லாம் 1945-க்குப் பின் நேதாஜி இருக்கிறார் என்பதற்கான முக்கியமான ஆதாரங்கள். மேலும் தைவான் நாட்டில் 1945-ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் ஏற்படவில்லை என தைவான் அரசு தெரிவித்து இருப்பது அவ்வாண்டு நேதாஜி இறக்கவில்லை என்பதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இது தவிர்த்து எங்கள் அமைப்போடு நேரடித் தொடர்பில் உள்ளார். எங்கள் அமைப்புத் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங், நேதாஜியுடன் தொடர்பில் இருக்கிறார். அவரைப் பார்க்கிறார். அவரோடு சாப்பிடுகிறார். அவர் காலைத் தொட்டுக் கும்பிடுகிறார். அதற்கான ஆதாரமும் இருக்கிறது.
அநேகமாக 2015, 2016-ஆம் ஆண்டிற்குள் நேதாஜி வருவார். வரும்பொழுது சாமியாராக வரமாட்டார். லட்சக்கணக்கான மக்களை திரட்டிக் கொண்டு வருவார். மக்கள் ஒரு புரட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேதாஜி 2015 அல்லது 2016-க்குள் வரப்போவது உறுதி. நாங்கள் அழைத்து வரப்போவது இல்லை. அவரே வரப்போகிறார். நேதாஜி வரும்போது அவரை யாராலும் தடுக்க முடியாது' என்றார்

'இப்பொழுது வருபவர் நேதாஜிதான் என்று எப்படி உறுதியாக நம்புவது?'
"நேதாஜி வந்தவுடனே அவரிடம் டி.என்.ஏ. பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். எந்தப் பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள். எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. புகைப்படத்திலும் வீடியோவிலும் இருக்கும் துறவி மகான் சந்த் சாம்ராட்டுக்கும் நேதாஜிக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

"நேதாஜி ஒரு சுத்த பிரம்மச்சாரி என்றால், அனிதா போஸ் யார்?"
"1961-இல் நேரு, வல்லபாய் படேல், காங்கிரஸ் வலதுசாரிகள் கூட்டு சேர்ந்து அனிதா போஸ் என்ற பெண்ணைக் கொண்டு வந்து நேதாஜியின் பிரம்மச்சாரிய வாழ்க்கைக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்கள். இதில் மக்கள் யாரும் ஏமாற வேண்டாம்' என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருச்சி உறையூரில் அறிக்கை விட்டு இருக்கிறார். 1955-இல் பசும்பொன் தேவர், நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று கடிதம் எழுதியிருக்கிறார். அது அந்த ஆண்டு வந்த, 'கண்ணகி' மாத இதழில் வெளியானது. 'பசும்பொன்' தேவரின் கட்டுரைகள் என்ற தலைப்பில் ஜீவானந்தம் என்பவர் தொகுத்த தொகுப்பில் இந்தக் கடிதம் இடம் பெற்றுள்ளது. அனிதா போஸ் நேதாஜி மகளே இல்லை. அனிதா போஸ் என்று எதுவும் சான்றிதழ் இருக்கிறதா? அனிதா பாப் என்றுதான் அவர்களின் ஆவணத்திலிருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் அனிதா போஸ் என்ற பெயர் இல்லை. அவர் டி.என்.ஏ பரிசோதனைக்குத் தயாரா?"
'118 வயதான நேதாஜியின் முதுமையைப் பற்றி…'

"முதுமை என்று எப்படிச் சொல்ல முடியும். காயகல்பம் சாப்பிட்டு யோகா செய்து எத்தனையோ பேர் இளமையாக இருக்கிறார்கள். இப்ப நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட 112 வயது முதியவர் ஓட்டுப் போட்டு இருக்கிறார். சாதாரணக் குடும்பஷ்தனே 112 வயது வரை வாழ முடியும் என்றால்… நேதாஜி ஒரு சுத்த பிரம்மச்சாரி. தீவிரத் தவத்தில் ஈடுபடும் அவரால் காலம் கடந்து வாழ முடியாதா?

இந்த வழக்கு, நேதாஜி இருக்கிறார் என்ற விஷயம் மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் போடப்பட்டது. வழக்கு எப்படியானாலும் பரவாயில்லை" என மிகச் சாதாரணமாய் சொல்லி முடித்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் ஜனவரி 5-ஆம் தேதி வருகிறது.

நன்றி ; புதிய தலைமுறை
எகின் பாலா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...