உருவானது மத்திய கொள்கைக் குழு

 கடந்த 65 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த திட்டக் குழுவுக்கு மாற்றாக "மத்திய கொள்கைக் குழு' என்ற புதிய அமைப்பை மத்திய அரசு வியாழக்கிழமை உருவாக்கியது. மத்திய, மாநில அரசுகளுக்கு கொள்கைகளை வகுக்கும் நிபுணர் குழுவாகச் செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார்.

இதுதொடர்பாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

"நிதி ஆயோக்' எனப்படும் இந்தக் குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் அடங்கிய நிர்வாகக் கவுன்சில் இடம்பெற்றிருக்கும். மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தேசிய செயல் திட்டத்தை வழங்குவதற்காக, ஒத்துழைப்பு சார்ந்த கூட்டாட்சியைக் கொண்டுவர இது பாடுபடும்.

இந்த அமைப்பில், பிரதமரால் நியமிக்கப்படும் தலைமை நிர்வாக அதிகாரியும், துணைத் தலைவரும் இடம்பெறுவார்கள். இவர்களைத் தவிர, சில முழுநேர உறுப்பினர்களும் பகுதிநேர உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். நான்கு மத்திய அமைச்சர்களும் இந்தக் குழுவில் இருப்பார்கள்.

மேலும், குறிப்பிட்ட மண்டல கவுன்சில்களும் இந்தக் குழுவில் இடம்பெறும். அவற்றில் பிரதமரால் தேர்வு செய்யப்படும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும், அறிஞர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள்.

தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார விவகாரங்கள் உள்பட முக்கியமான கொள்கை விவகாரங்களில் தொழில்நுணுக்க ஆலோசனை வழங்கும் அமைப்பாக புதிய அமைப்பு செயல்படும். தேசிய வளர்ச்சிக்கான முன்னுரிமைத் திட்டங்கள், துறைகள், உத்திகள் போன்றவை தொடர்பாக ஒரு கண்ணோட்டத்தை வகுப்பது இதன் நோக்கமாக இருக்கும்.

திறமையான நிர்வாகத்தை அளிப்பதற்கான ஆலோசனைகளைப் பெறும் கருவியாக இருப்பதே மத்திய கொள்கைக் குழுவின் முக்கிய நோக்கமாகும். மாநிலங்கள், நிபுணர்கள், அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் விரிவாகக் கலந்து ஆலோசித்த பிறகு மத்திய கொள்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிராம அளவில் திட்டங்களை வகுப்பதற்கு பல்வேறு அமைப்புகளை இது உருவாக்கும். பின்னர், படிப்படியாக அரசின் பல்வேறு உயர்நிலைகளில் இவை இணைக்கப்படும்.

பொருளாதார உத்தியிலும் கொள்கையிலும் தேசிய நலன் சார்ந்த விவகாரங்கள் சேர்க்கப்படுவதை மத்திய கொள்கைக் குழு உறுதி செய்யும்.

பொருளாதார வளர்ச்சியில் இருந்து போதிய பயன்களைப் பெறாத நிலையில் இருக்கும் சமூகத்தின் பிரிவுகள் விஷயத்தில் இந்தக் குழு சிறப்புக் கவனம் செலுத்தும். இக்குழு நீண்டகாலக் கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் வகுப்பதோடு அவற்றின் முன்னேற்றத்தையும் கண்காணிக்கும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது, திட்டக் குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது மத்திய கொள்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில், மத்திய கொள்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்தில் மகாத்மா காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், தீனதயாள் உபாத்யாய போன்ற தலைவர்களின் பொன்மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இக்குழுவின் முதல் துணைத் தலைவராக பிரபல பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குழுவின் இரண்டு பகுதிநேர உறுப்பினர்களும் நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி அமைப்புகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முழு நேர உறுப்பினர்களாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

முன்னதாக, நாட்டில் சோசலிச சகாப்த காலத்தைச் சேர்ந்த திட்டக் குழு, கடந்த 1950ஆம் ஆண்டு, மார்ச் 15ஆம் தேதி அமைச்சரவைத் தீர்மானம் மூலம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...