வைகோவின் வீர வசனங்கள்

 விபரீதங்களுக்கான விஷ வித்துக்கள்
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறியதாக அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இவர் கூட்டணியிலிருந்து வெளியேறியதைப் பற்றி விரிவாக எழுத வேண்டிய நிலை இல்லை. ஆனால் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில், வைகோவின் பேச்சு அமைந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். இவரின் பேச்சில் தேசவிரோத கருத்துக்கள் எவ்வாறு இருந்தன என்பதை பார்க்கலாம்.

நவம்பர் 27, 2014 அன்று சென்னையில் நடந்த 'பினாங்கு பிரகடனம்' என்ற கூட்டத்தில் வைகோ பேசும்போது, காத்மாண்டில் நடந்த சார்க் மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபரிடம் வரும் இலங்கை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறியதை கண்டிக்கும் விதமாக பைபிளில் இருக்கும் ஒரு வாசகத்தை முன் வைத்தார். பன்றிகளுக்கு முன்னாள் முள்ளை வைக்காதீர்கள் என்ற வாசகத்தை கூறிவிட்டு அவ்வளவு தான், அதற்கு மேல் பேச மாட்டேன் என்றார். ஒரு நாட்டின் பிரதமரை இவ்வாறு விமர்சிப்பது சரியா?
இதே கூட்டத்தில், 1948ல் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என நேரு கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று; 1958, 1968 என பல கட்டங்களில் இதே கோரிக்கை எழுந்தபோது, காஷ்மீரில் தேர்தல் நடந்து விட்டது. அதுவே கருத்து கணிப்பு என்று நேரு கூறிவிட்டார். ஆகவே அது எப்படி கருத்து கணிப்பாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி, காஷ்மீர் பிரச்சினையை கிளப்பிப் போட்டு இருக்கிறேன். தேவைபட்டால், காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்புவேன் என்று பேசியது, இவரின் தேச விரோத செயலாகவே பார்க்க வேண்டும். 67 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையை எடுப்பது, வைகோவின் முஸ்லிம் பாசம் என்பதை விட, பிரிவினை வாதிகளுக்கு வக்காலத்து வாங்குபவர் என்பதையே காட்டுகிறது.

1948ல் ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பாகிஸ்தான் நடக்கவில்லை என்பதையோ அல்லது, தான் பிடித்த பகுதிகளில் சிலவற்றை சீனாவிற்கு பாகிஸ்தான் தாரைவார்த்து கொடுத்தது பற்றியோ வைகோ வாய் திறக்கவில்லை. 2008ம் வருடம் லண்டனில் நடந்த தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள வைகோ முயன்ற போது, இங்கிலாந்து அரசு விசா கொடுக்கவில்லை. இதற்கு காரணமாக கூறியது, வைகோ தேச விரோத பேச்சுக்காக கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தது என்று கூறப்பட்டது.

2011 செப்டம்பர் 23ல் சென்னையில் தமிழ் அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட பொதுக் கூட்டத்தில் வைகோ பேசியது இது: "சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இந்திய அரசு நிறைவேற்றுமானால், தமிழகம் இந்திய யூனியனிலிருந்து பிரிந்து விடும். 2047ல் இந்தியாவின் நூறாவது சுதந்திர தினம் கொண்டாடும் போது, தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது".

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் நடந்த யுத்தத்தின் போது, இந்தய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுப்பதாக உறுதியற்ற தகவல்கள் வெளியே கசிந்த போது, வைகோ விடுத்த அறிக்கை, "இந்திய அரசாங்கம் இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கினால், நாங்களும் இலங்கையில் உள்ள எங்கள் சகோதரர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவோம். வெளிப்படையாகவே நான் ஈழத்திற்கு செல்வேன். இதற்காக இங்குள்ள இளைஞர்களை தயார்செய்து போருக்கு அனுப்புவோம்" என வைகோ பேசியதும் இந்திய இறையாண்மைக்கு விரோதமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையைத் தன் வசமாக்கிக் கொண்டு, பல பெரிய திட்டங்களை செயல்படுத்த தொடங்கி விட்டது சீனா. பாதுகாப்பு கட்டமைப்பு உள்பட, சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள் ஹிந்து மகா சமுத்திரத்தில் இலங்கையின் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவை அச்சுறுத்தவே என்பது சின்ன குழந்தைக்கு கூட நன்கு தெரியும். இதே நேரத்தில் இந்தியா – இலங்கை கசப்பை பயன்படுத்தி, பாகிஸ்தான் இலங்கை மண்ணிலிருந்து தீவிரவாதிகளை தயார் செய்து தமிழகத்தின் வழியாக தென்னிந்தியாவை குறிபார்க்கிறது. இதற்காக பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து வியாபாரிகள் என்ற போர்வையில் தமிழகத்தில் ஊடுருவல் நடந்து வருகிறது.

இந்த தருணத்தில் இந்தியா இலங்கையை பகை நாடாக அறிவித்தால், ஒரே நேரத்தில் பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் தாக்குதல்களை சமாளிக்க வேண்டும். இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள வைகோ போன்றவர்கள் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை வைப்பது சரியா? ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுக் கொள்கையின் காரணமாக, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் நட்பு நாடுகளாக இருக்கவில்லை. இந்த மாற்றத்தின் காரணமாகவே இலங்கை கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாமல், தனது அரசியல் சுயநலத்திற்காக மட்டுமே கட்சி நடத்தும் வைகோ போன்றவர்களுக்கு விவேகம் உதயமாகுமா?

நன்றி : – ஈரோடு சரவணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...