இம்மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ள உ.பி., சட்டமேலவை தேர்தலை முன்னிட்டு, நான்குபேர் கொண்ட பாஜக குழு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "உத்தரப் பிரதேச சட்ட பேரவை பாஜக தலைவர் சுரேஷ்குமார் கன்னா தலைமையிலான இந்த நால்வர்குழு மேலவை தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும்' என்றார்.
மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட உ.பி., சட்டப் பேரவையில், மேலவை தேர்தலில் போட்டியிடுவதற்கு 31 எம்எல்ஏக்களின் ஆதரவுதேவை. அந்த மாநிலத்தில் பாஜக.,வுக்கு 41 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். மேலவை தேர்தலில் இரண்டு வேட்பாளர்களை பாஜக நிறுத்துகிறது.
அவர்களின் வெற்றிக்கு தேவைப்படும் எஞ்சியுள்ள 21 வாக்குகளுக்கு சிறியகட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது. பாஜக அறிவித்துள்ள தேர்தல்குழு அந்த வாக்குகளைச் சேகரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும். இந்த மேலவை தேர்தலில் சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ்கட்சி ஆகியவையும் போட்டியிடுகின்றன. உத்தர பிரதேச சட்டமேலவையில் 12 உறுப்பினர்களின் பதவிக்காலம், வருகிற 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.