அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று வருகிறார்

 குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக் கிழமை (ஜன.25) வருகை தருகிறார்.

அவரது இந்த பயணத்தின்போது இருநாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், கூட்டாக பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பது, ஆக்கப்பூர்வ அணுசக்தியில் நிலவும் வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூ விமானப் படை தளத்தில் இருந்து, ஒபாமாவை ஏற்றிக் கொண்டு அதிபரின் பிரத்யேக "ஏர் போர்ஸ் ஒன்' விமானம் இந்தியாவுக்கு சனிக்கிழமை புறப்பட்டது. ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்செல், நான்சி பெலோசி உள்ளிட்ட அமைச்சர்கள், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் இந்தியா வருகிறது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தில்லியின் பாலம் விமானப்படை தளத்தில் அதிபரின் "ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானம், அவரது பாதுகாப்பு விமானம் ஆகியவை தரையிறங்கும். ஒபாமாவை மத்திய அரசு சார்பில் மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்கிறார். அங்கிருந்து சர்தார் படேல் மார்கில் உள்ள மௌரியா ஷெரட்டன் ஹோட்டலில் தங்கி அரை மணி நேரம் ஓய்வெடுக்கிறார். நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு இந்திய முப்படையினரின் அணிவகுப்பையும் அவர் பார்வையிடுவார். பின்னர், பகல் 12.30 மணிக்கு ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று அதிபர் பாரக் ஒபாமா மலரஞ்சலி செலுத்துகிறார். அங்கு அவரது வருகையின் நினைவாக மரக்கன்றையும் நடுகிறார்.

அங்கிருந்து இந்தியா கேட் அருகே உள்ள ஹைதராபாத் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஒபாமாவும் இரு தரப்பு நல்லுறவுகள் குறித்து முக்கியப் பேச்சுவார்தையில் ஈடுபடுவர். இச்சந்திப்பின் நிறைவாக பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் பிற்பகல் 3 மணிக்கு கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.

இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதையடுத்து, அங்கு ஒபாவுக்கும் அவரது மனைவி மிச்செல்லுக்கும் பிரணாப் முகர்ஜி இரவு விருந்தளிக்கிறார்.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ராஜபாதையில் கொண்டாடப்படவுள்ள இந்திய குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அதிபர் ஒபாமா பங்கேற்கிறார். இரண்டரை மணி நேரம் அங்கிருந்து குடியரசு தின நிகழ்ச்சிகளை அவர் கண்டு களிப்பார்.

பிற்பகல் 3.50 மணியளவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளிக்கும் வரவேற்பு நிகழ்வில் ஒபாமாவும் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இதையடுத்து, மாலை 5.30 மணியளவில் தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் இந்திய-அமெரிக்க தொழிலக கூட்டமைப்பு நிகழ்வில் பங்கேற்று இரு நாட்டுத் தொழிலதிபர்கள், தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஒபாமா கலந்துரையாடுவார்.

இதேபோல, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தில்லி ஸ்ரீஃபோர்ட் அரங்கில் அமெரிக்க தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் ஒபாமா பங்கேற்கிறார்.

இதையடுத்து, பகல் 1.50 மணிக்கு தில்லியில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பாரக் ஒபாமா புறப்படுகிறார்.

இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வரும் அதிபர் என்ற முறையிலும், இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற முறையிலும் ஒபாமாவின் இந்திய சுற்றுப்பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...