அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு முக்கிய மானது இந்தியாவுடனான வலுவான நல்லுறவே

 அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு முக்கிய மானது இந்தியாவுடனான வலுவான நல்லுறவே என்று நம்புகின்றனர் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.

புதுடெல்லி ஐதராபாத் இல்லத்தில் இந்தியா – அமெரிக்கா அதிகாரிகள் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஒபாமா கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசுகையில், மிகவும் தாராளமாக வார்த்தை களுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த வருடம் மாடிசன் சதுக்கத்தில் பிரதமர்மோடி பாலிவுட் நட்சத்திரம் போன்று வரவேற்கப்பட்டார். அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் 60 சதவீதம் வரையில் உயர்ந் துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு முக்கிய மானது இந்தியாவுடனான வலுவான நல்லுறவே என்று நம்புகின்றனர். சுத்தமான எரி சக்தி மற்றும் கால நிலை மாற்றத்திற்கு ஆதரவு ஆகியவற்றை ஊக்குவிக்க செய்வதில் நாங்கள் உடன் பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. ஈரானில் இருந்து அணு ஆயுதங்களை வாங்குவதை தடை செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இருவரும் இணைந்தே இருப்போம். என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்துபேசினர். அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் ரஷியா மற்றும் ஏமன் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. இதற்கு ஒபாமா பதில் தருகையில் , ரஷியாவின் பொருளாதாரம் பலவீன மடைவதை அமெரிக்கா விரும்ப வில்லை. ரஷியா மீதான பொருளாதாரதடை தொடரும். ஏமனில் நிலவும் அரசியல் சூழல் கவலையளிக்கிறது. ஏமனில் பெரும்பாலான மக்கள் அரசியல் தீர்வையே விரும்புகின்றனர். என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...