சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் போது போலீசாரால் தடிஅடி நடத்தப்பட்டு, அதன் காராணமாக காயம் அடைந்த மாணவர்களைப் பார்க்க இன்று அரசு மருத்துவமனை சென்றேன். மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அங்கு ஓர் பதற்றமான சூழ்நிலை
உருவாவதை காவல்துறையினர் உணர்ந்திருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும், மாணவர்கள் தாங்கள் பயிலும் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மாற்றக் கூடாது என்று கோரிக்கையுடன் முதலமைச்சரைச் சந்திக்க முயன்றிருக்கிறார்கள்.
முதலமைச்சர் அவர்களைச் சந்தித்திருந்தால், இந்த போராட்டம், அதனால் போலீஸ் தடிஅடி, அதனால் மாணவர்கள் மற்றும் போலீசார் காயம,; பொது மக்களின் இயல்பு நிலை பாதிப்பு என தொடர்ச்சியாக நடந்த பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம்.
மாணவர்கள் அதே வளாகத்தில் இருந்தால், தாங்கள் வழக்கறிஞர்களையும், வழக்குகளையும் தெரிந்து கொண்டு ஆக்கமும் ஊக்கமும் பெறுவோம் என்று சொல்கின்றனர். கட்டிடம் செப்பணிடப்பட வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம், விடுமுறை தினங்களில் நவீன வசதிகளோடு அதை செப்பனிடலாம். இல்லை எனில் உண்மைநிலையை மாணவர்களுக்கு எடுத்துக் கூறலாம். இவையெல்லாம் செய்யாமல் மாணவர்கள் மீது தடியடி நடக்கும் அளவிற்;கு விட்டது காவல்துறையினர்; மற்றும் அரசின் தவறாகும். ஆக மாணவர்களுக்கு சட்டக்கல்லூரி நிலைபற்றி முழுவதுமாக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, தமிழக அரசின் மெத்தனம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. உதாரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையை நான் பார்க்கச் சென்ற போது மருத்துவமனையின் எலும்புமுறிவு பிரிவில் கூட பலர் தரையில் படுத்துக்கிடக்கும் நிலைதான் இன்னும் நிலவுகிறது. அது மட்டுமல்லாமல,; பல நோயாளிகள் என்னிடம் வந்து தங்கள் குறைகளைச் சொன்ன போது ஓர் மருத்துவர் என்ற முறையில் நான் தமிழக அரசுக்கு வைக்கும் கோரிக்கை போர்க்கால அடிப்படையில் மருத்துவமனைகளின் சேவைகளை பொதுமக்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதும், குறிப்பாக புதிய சட்ட மன்ற கட்டிடத்தில் இயங்கும் பல்நோக்கு மருத்துமனைக்காவது சில துறைகளை மாற்றி, அங்கு இருக்கும் அபரிதமான இடம் நோயாளிகளுக்கு பயன்பட்டு அதன் மூலம் நோயாளிகள் தரையில் கிடந்து தவிர்க்கும் நிலையாவது தடுக்கப்படுமா என்பதை ஆராய வேண்டும். அதே போல அதிக விபத்துகள் நடக்கும் குரோம்பேட்டை மருத்துவனையில் X-Ray கருவிகள் வேலை செய்யவில்லை.
எல்லாவற்றிக்கும் மேலாக, ராஜபாளையத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவியதற்குக் காரணம் அங்கு 20 நாட்களுக்கு ஓர் முறை குடிதண்ணீர் விநியோகம் செய்ததுதான் காரணம் என்ற சுகாதாரத்துறை ஆய்விலேயே தகவல் வந்திருக்கிறது.
அன்றாடம் தன் வாழ்விற்கு பிழைக்கும் மக்கள் பயன்படுத்தும் ரேஷன் கடைகளிலும் பிரச்சினை, ரேஷன் ஊழியர்கள் போராட்டத்தினால் பொது மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று திருவொற்றிய+ர் MRF தொழிலாளர்களான திரு. வெங்கடேசன், திரு. ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல தொழிலாளிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை நேரில் சென்று பார்த்தேன். அரசு தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
சமீபத்தில் ராணிப்பேட்டையில் தோல்தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது. மாசுகட்டுபாடு வாரியம் செயலிழந்திருப்பதாகக் காட்டுகிறது. ஆக எல்லாத் துறைகளிலும் அரசு எந்தக் கவனமும் செலுத்தாமல் இருப்பது வருந்தத்தக்கது. அத்துடன் தமிழகத்தில் பெருகி வரும் கொலை கொள்ளைகள், காவல்துறை செயலிழந்திருப்பதையே காட்டுகிறது.
நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்படாமல் இருக்கும் அரசு என்ற நிலையில் மாற்றம் கொண்டு வந்து,; உண்மையில் மக்களின் முதல்வரின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன்.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
மாநில தலைவர்
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.