இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் ஆணையம் செயல் படுகிறதா என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது என்று மத்திய நீர்வழி மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுப்ரமணியத்தை ஆதரித்து பிரச்சாரம்செய்ய திருச்சிவந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது.
ஆளுங்கட்சியினர் சாதனைகளை சொல்லி வாக்குசேகரிக்காமல் அவர்கள் முறைகேடாக சம்பாதித் ததிலிருந்து சிறிதளவு மக்களிடம் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார்கள். சாத்தான் குளத்தில் ஒரு முறை இடைத்தேர்தல் நடந்த போது சாத்தான் குளம் இனி தேவன்குளம் ஆக மாறும் என கூறி வாக்கு சேகரித்தார்கள்.
ஆனால், அதன் பிறகு அந்த ஊர் மிகவும் மோசமான நிலைக்குத் தான் சென்றதே தவிர முன்னேறவில்லை. இதே நிலை ஸ்ரீரங்கத்துக்கும் ஏற்படலாம் . நூற்றுக் கணக்கில் கார்கள், ஆயிரக் கணக்கில் வெளியூர் ஆட்கள், தெருவுக்கு தெரு விருந்து நடக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் தேர்தல் ஆணையம் என ஒன்று இங்கே செயல் படுகிறதா என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது . இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெறுவதால் தமிழகத்தில் எந்தமாற்றமும் ஏற்படப் போவதில்லை. பாஜக வெற்றிபெற்றால் நாட்டின் வளர்ச்சிக்கு அங்கீகாரம் அளித்தபெருமை தொகுதி மக்களை சேரும். பாஜக.,வுக்கு வெற்றிகிடைத்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி, அரசுக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.