பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை ஆதரித்து 10 ஆயிரம்பேர் பாஜக.வில் இணையும் பொதுக் கூட்டம் மாவட்ட பாஜக. சார்பில் தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் நேற்றுமாலை நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்டதலைவர் பழ.அண்ணாமலை தலைமை தாங்கினார். பூண்டி வெங்கடேசன், சூரக் கோட்டை ராஜா, வக்கீல் ராஜேஸ்வரன், ஜெய்சதீஷ், வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோ வரவேற்றார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:–
தமிழகத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக கூறி தமிழர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி, இந்தி எதிர்ப்பு போராட்டங்களை கல்லூரி மாணவர்கள் மூலம் நடத்தி 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர் மாறி, மாறி தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. கருணாநிதி 5 முறையும், எம்.ஜி.ஆர். 3 முறையும், ஜெயலலிதா 3 முறையும், இடைப்பட்ட காலத்தில் 2 முறை ஓ.பன்னீர்செல்வமும் முதல்-அமைச்சராக இருந்துள்ளனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே கொள்கை உடைய கட்சிகள் தான். வித்தியாசம் எதுவும் கிடையாது.
கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் தமிழ் எங்கே வளர்ந்து இருக்கிறது?. தமிழுக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு என்ன உதவிகளை இவர்கள் பெற்று தந்து இருக்கிறார்கள்?. உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பம் என்ன நிலையில் உள்ளது?.
கடந்த 50 ஆண்டுகளில் புதிய தொழிற்சாலை கொண்டு வரப்பட்டிருக்கிறதா?. நீங்கள்(பொதுமக்கள்) மாறி, மாறி தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் வாக்களித்து ஏமாந்துவிட்டீர்கள். கர்நாடகம் காவிரி தண்ணீரை வழங்க முரண்டுபிடிக்கும். உடனே காவிரி தண்ணீரை கொண்டு இங்கே அரசியல் நடத்துவார்கள்.
திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் காவிரியில் எத்தனை தடுப்பு அணைகள் கட்டப்பட்டு இருக்கிறது. காவிரி நதியாவது இருக்கிறதா? அவற்றையும் மணல் கொள்ளை மூலம் சுரண்டி வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., மீது குற்றம் சொல்வதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். நம்மை ஏமாற்றுவதற்காக தான் தேர்தலில் பணமும், இலவச பொருட்களையும் கொடுக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களை விட அதிகமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்களின் பணம் சுரண்டப்பட்டு வருகிறது. குஜராத்தை போல் மது இல்லாத மாநிலமாக தமிழகம் மாற உங்களுக்கு விருப்பம் இல்லையா?. இலங்கை அதிபர் சிறிசேனா வருகிற 15ந்தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவரை வரவேற்கும் பொறுப்பு தமிழன் என்ற முறையில் எனக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
சிறிசேனா இந்தியாவுக்கு வந்து திரும்பிய பிறகு இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்களின் வாழ்க்கைக்கு சரியான பாதை வகுக்கப்படும். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. பட்டறைகள் காலியாகி கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் 2016ம் ஆண்டு தாமரை ஆட்சி ஏற்பட்டே தீரும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய உறுப்பினர்களை பா.ஜ.க.வில் சேர்த்து அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேசும்போது, தமிழகத்தில் 65 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். தி.மு.க. குடும்ப கட்சியாக இருக்கிறது. பா.ஜ.க. குடும்ப கட்சி அல்ல. பா.ஜ.க. ஒருபோதும் ஊழலை ஆதரித்தது கிடையாது. ஊழலுக்கு எதிரான இயக்கம். தமிழ்மொழி சிறப்பானது. ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும் தான் என்றார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், கோட்ட அமைப்பு செயலாளர் அய்யாரப்பன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர தலைவர் வினாயகம் நன்றி கூறினார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.