ராணுவத் தளவாட ஏற்றுமதிக்கு வழிவகை காணப்படும்

 ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்காமல், அவற்றை உள்நாட்டில் உற்பத்திசெய்வதற்கு ஊக்கமளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பெங்களூரு விமானப்படை தளத்தில், 10-ஆவது இந்திய விமானத்தொழில் கண்காட்சியை புதன்கிழமை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:

ராணுவத் தளவாடங்களை இறக்குமதிசெய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கும் நிலை நீடிப்பதை ஏற்க முடியாது உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதோடு அவற்றின் ஏற்றுமதிக்கும் வழிவகை காணப்படும்.

நமது ராணுவத்தயார் நிலையையும், ராணுவப் படையையும் நவீனமாக்க வேண்டும். இந்தக் கண்காட்சி, நமது நாட்டின் ராணுவத் தளவாட உற்பத்தியை அறிமுகப் படுத்தும் களமாக விளங்குகிறது. வலிமையான ராணுவ துறையை கொண்ட நாடு பாதுகாப்பானது மட்டும்மல்ல, பொருளாதார பயன்களையும் ஈட்டும் வல்லமை கொண்டதாகும்.

இந்தியாவில் ராணுவம்சார்ந்த தொழில்களை கொண்ட பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நமது ராணுவம் சார்ந்த தொழில்களில் தனியாரின் பங்களிப்பு மிகவும் குறைவாகும். ராணுவத் தளவாடங்களில் 60 சதவீதத்தை இன்னமும் இறக்குமதி செய்துவருகிறோம். இதற்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவிடுகிறோம். அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, 20 சதவீதம் முதல் 25 சதவீதம் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவில் கூடுதலாக 1.2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலிருந்து 40 முதல் 70 சதவீதம் கொள்முதல்செய்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ராணுவத் தொழில்வர்த்தகம் இரட்டிப்பாகும். இதனால், நேரடி வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் ராணுவம்சார்ந்த தொழில் முக்கிய பங்காற்றுகிறது. ராணுவக் கொள்முதல் கொள்கைகள், நடை முறைகளைச் சீர்திருத்திவருகிறோம். இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் ராணுவத் தளவாடங்களுக்கு முக்கியத்துவம் தருவோம் .

இந்தத் தொழிலில் கொள்முதல் கொள்கைகள் எளிமையாக்கப்படும். ராணுவ துறையில் வெளிநாட்டு அன்னியநேரடி முதலீட்டின் அளவை 49 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். சிறந்த தொழில் நுட்பம் இந்தியாவுக்கு வந்தால், இதுமேலும் அதிகரிக்கப்படும். வெளிநாட்டு நிறுவன முதலீடுகளின் அளவை 24 சதவீதமாக உயர்த்தி யுள்ளோம். பெரும்பாலான பொருள்களுக்கு தொழில் உரிமங்கள் பெறவேண்டியது கட்டாயம் என்பது ரத்து செய்யப் பட்டுள்ளது.

மேலும், சிலபொருள்கள் மீதான தொழில் உரிமவழங்கல் நடைமுறையும் எளிமையாக்கப் பட்டுள்ளது. ராணுவத் தளவாட பொருள்கள் உற்பத்தியில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். ராணுவத்தொழில் மேம்படுத்துவதற்கு "ஆஃப்செட்ஸ்' முறை மிகவும் முக்கியமானதாகும். இந்தமுறையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராணுவத்துறை ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசின் நிதி ஆதார உதவி தேவைப் படுகிறது. இந்தியாவில் தளவாடப்பொருள் மாதிரிகளை உருவாக்க 80 சதவீத நிதியுதவியை அரசு வழங்கும்.

இது தவிர, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தை ஏற்படுத்தி, ராணுவம்சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளில் விஞ்ஞானிகள், படைவீரர்கள், கல்வியாளர்கள், தொழில் துறையினர் ஆகியோரை ஈடுபடுத்த வேண்டும்.

நமது ஏற்றுமதி கொள்கை எளிமைப் படுத்தப்படும். மேலும், உயர்தர ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீடிக்கும். நமது பாதுகாப்பு கருவிகள், தொழில் நுட்பங்கள் தவறானவர்களின் கையில் சிக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களைக் கையகப் படுத்துதலிலும், ஒப்புதல் நடை முறைகளிலும் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். புத்தாகத்தை அடிப்படையாக கொண்டு ராணுவத்தளவாட ஏற்றுமதியை பெருக்க வேண்டும்.

இந்தியாவின் உற்பத்தி துறையை மாற்றியமைத்தால், ராணுவத் தொழில் வெற்றிபெறும். உள்கட்டமைப்பு, சீரான வர்த்தகச்சூழல், தெளிவான முதலீட்டு கொள்கைகள், எளிமையான வர்த்தக நடைமுறைகள், நிலையான, வெளிப்படையான வரிமுறை ஆகியவை நமக்கு அவசியம் தேவைப்படுகின்றன.

ராணுவ தொழிலுக்கு தகுதியான மனிதவளம் தேவைப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவத்தொழில் துறையில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். அணு ஆற்றல், விண்வெளி ஆய்வுத்துறைக்குச் செய்ததுபோல, ராணுவ தொழில்சார் மனிதவளத்தை மேம்படுத்த சிறப்பு பல்கலைக் கழகங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

ராணுவ உற்பத்திக்கு முதலீடுகளை அதிகரிக்க மாநில அரசுகள் சிறப்புத்திட்டத்தை வகுக்கவேண்டும். ராணுவத் தளவாடங்களை இனியும் வாங்க மாட்டோம். ராணுவத்தொழில் துறையில் உலக அளவில் இந்தியா சிறந்த நாடாக உருவாகும்.

ராணுவத்துறையில் உலகச்சந்தை வர்த்தகத்திற்கு இந்தியாவை உற்பத்திக் களமாக பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் களமாகவும் இந்தியாவைப் பயன்படுத்தலாம். வலிமையான இந்திய ராணுவத்தொழில் துறை, நமது நாட்டைப் பாதுகாப்பதோடு, நாட்டை வளமானதாக்கும்.

நமது நாட்டைப் பாதுகாப்பாக்க, உலகில் அமைதி நிலைக்க, நமது மக்களுக்கு புதியவாய்ப்புகள் மலர, புதிய தொழில் திட்டங்கள், கூட்டுமுயற்சிகளின் வெற்றிக்கு இந்த கண்காட்சி விதையாக அமையும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...