மது கடைகளுக்கு பதிலாக மலிவுவிலை புத்தக கடை நடத்த அரசு முன்வரவேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் யோசனை தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் சர்வதேச மகளிர்தின விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது. இதில், கலந்துகொண்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெண்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மதுக்கடைகள் தான். மது போதையில் தான் அதிகத்தவறுகள் நடைபெறுகின்றன. எனவே, தமிழக அரசு நடத்திவரும் மது கடைகளுக்கு பதிலாக மலிவுவிலை புத்தகக் கடைகளை நடத்த அரசு முன்வர வேண்டும்.
அது போல, மலிவு விலை மளிகை கடை போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் மலிவுவிலை கடைகளை திறந்தால் மதுக்கடைகளை மூடுவதால் ஏற்படும் நஷ்டத்தை அதன் மூலம் ஈடு செய்ய முடியும்.
எனவே, அடுத்த மகளிர் தினத்துக்குள் தமிழகத்தில் உள்ள மது கடைகளை மூட தமிழக அரசும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியபிரதமர் ஒருவர், இலங்கைக்கு பயணம் செய்ய விருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.
இதனால், அங்குள்ள தமிழர்களின் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்படும். பிரதமர் மோடியின் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த உதவும் என்றார் தமிழிசை.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.