பிரதமர் மோடியின் இலங்கை சுற்று பயணத்தை முன்னிட்டு சிறை பிடிக்கப்பட்ட 86 தமிழக மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றங்கள் நேற்று உத்தரவிட்டன.
நாகப்பட்டினம், காரை காலை சேர்ந்த 86 மீனவர்கள் 10 விசைப் படகுகளில் கச்சத்தீவு மற்றும் முல்லைத் தீவு கடற்பகுதியில் பிப். 26-ம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து யாழ்ப் பாணம் சிறையில் 43 பேரையும், திரிகோண மலை சிறையில் 43 பேரையும் நீதிமன்ற காவலில் அடைத்தனர். இவர்களது காவல் மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், ''இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு வர உள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழகமீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படு வார்கள்'' என இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார்.
அதன்பேரில் மீனவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பருத்தித்துறை, திரிகோணமலை நீதிமன் றங்களில் தமிழக மீனவர்கள் 86 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.