மலையக மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அப்பகுதி தலைவர்களை டில்லி வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைகான இரண்டுநாள் பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் கொழும்பு மற்றும் வட பகுதிக்கு மட்டுமே சென்றிருந்தார்.
நாட்டின் கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு அவர் வராதது வருத்தமும், ஏமாற்றமும் தருவதாக உள்ளன என்று அங்குள்ளவர்கள் கருதினார்கள்.
இந்நிலையில் இந்தியா புறப்படும் முன்னர் மலையக பகுதி தலைவர்களை நரேந்திரமோடி சந்தித்தார்.
அப்போது மலையக பகுதி தொடர்பான தகவல்கள் தன்னிடம் போதுமான அளவில் இல்லை , அவற்றை சேகரிக்கும் நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டுள்ளதாக அவர் தங்களிடம் தெரிவித்தார் என அவரை சந்தித்த குழுவில் இருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
இதையடுத்தே அடுத்தகட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்பில், மலையக தலைவர்களை டில்லி வருமாறு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்ததாக மனோ கணேசன் தெரிவித்தார்.
இலங்கையில் அனைத்து தமிழ்மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் இந்திய பிரதமர் சூசகமாக தங்களிடம் தெரிவித்ததாக கூறும் அவர், மலையக பகுதியில் 20,000 வீடுகளைக் கட்டித்தர இந்தியப் பிரதமர் உறுதியளித்ததாகவும் கூறினார்.
போதுமான நேரமின்மை காரணமாகவே தன்னால் மலையகப் பகுதிக்கு வர முடியவில்லை என்று மோடி கூறியதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஆனாலும் இந்தியவம்சாவளி மக்களின் நலன்களின் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதையும் அவர் தங்களிடம் கூறியதாகவும் அவர் மேலும்கூறினார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.