2014-ம் ஆண்டின் தேர்தல்முடிவுகள் வெளியான தினமான 16-5-2014 அன்று நாட்டிலுள்ள பெரும் பான்மையான மக்களும் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார்? என்று தொலைக்காட்சி முன்னரும், செல்போன் வழியாக செய்திகளை அறியவும் தவமாய் தவம் கிடந்தவேளையில் அடுத்த ஆட்சியின் கதாநாயகனாக கணிக்கப்பட்ட நரேந்திர மோடி அன்று பகல் 12 மணி வரையில் டி.வி. பார்க்காமலும், கைபேசியை எடுக்காமலும் தியானத்தில் கழித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனிபிளயரின் ஊடக ஆலோசகராக பணியாற்றிவந்த லேன்ஸ் பிரைஸ் என்பவர், 'மோடியின் தாக்கம்' என்ற பெயரில் எழுதியுள்ள ஒருநூலில் இந்த தகவல் பதிவாகியுள்ளது.பல்வேறு சந்தர்ப் பங்களில் மோடியுடன் அவர்செய்த நேர்காணல் தொகுப்புகளும் இந்த நூலில் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற தேர்தல்முடிவுகள் வெளியான தினத்தில் பகல் 12 மணி வரையில் டிவி. பார்க்காமலும், கை பேசியை எடுக்காமலும் தியானத்தில் கழித்ததாக ஒரு பேட்டியின் போது மோடி தெரிவித்துள்ளார். பகல் 12 மணிக்கு பின்னர் தன்னை முதன் முதலாக செல்போனில் தொடர்புகொண்ட பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் நமது வெற்றி உறுதியாகிவிட்டது என்ற செய்தியை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
பிரசாரத்துக்காக தனியாரின் ஹெலி காப்டர்களை நாங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு சுமத்தப் படுகின்றது. பிரசாரத்துக்கு அவசியம் என்று பட்டிருந்தால் சைக்கிள்களைகூட நான் வாடகைக்கு எடுத்திருப்பேன். எனது பிரசாரத்துக்கான அனைத்து செலவுகளையும் எங்கள் கட்சி ஏற்றுக்கொண்டது என்று அவர் மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று அவ்வேளையில் வெளிப் படையாக கருத்து தெரிவித்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், யோகாகுரு பாபா ராம்தேவ், வாழும் கலை நிறுவனர் ரவி சங்கர் ஆகியோரை இந்த பேட்டிகளின் போது நினைவு கூர்ந்த மோடி, பிரதமர் பதவி வேட்பாளராக தன்னைத்தான் முன்நிறுத்த வேண்டும் என யாரையும் நான் வற்புறுத்தியதில்லை என்றும், கட்சியின் தலைமை யாரை முன்நிறுத்தும்? என்று அக்கறை காட்டியதில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.