வானொலி மூலம் மக்களிடம் நேரடியாக உரை யாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, இம்முறை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுடன் உரையாடுகிறார்..
இந்நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் வரும் 22 ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் வேளாண் மற்றும் அதன் சார்துறைகள் பற்றி உரையாடுவார். விவசாயிகளுடன் மற்ற குடிமக்களும் தங்கள் கருத்துக்களை "mygov.in" என்ற இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த மனதின் குரல் நிகழ்ச்சிமூலம் இது வரை பிரதமர் ஐந்து முறை நாட்டு மக்களுடன் உரையாற்றியுள்ளார். மக்களின் மனதிற்கு நெருக்கமான பலபிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். தூய்மை இந்தியா திட்டம், காதிமேம்பாடு, திறன் மேம்பாடு, ஊனமுற்றோர்களுக்கான கல்வி உதவித் தொகை, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு குறித்து அவர் உரையாடினார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் முந்தையபகுதி கடந்த பிப்ரவரி மாதம் 22 ம் தேதி நடைபெற்றது. அப்போது பிரதமர், தேர்வு குறித்த மனக் கவலையையும் கலக்கத்தையும் விட்டுத்தள்ளி ஒருசாதகமான அணுகு முறையை மேற்கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த மனதின்குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமா உடன் பகர்ந்து கொண்டார். அப்போது இரு தலைவர்களும் பலபிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது. அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் அதேநேரம் இந்த நிகழ்ச்சி பொதிகை, விவித்பாரதி, எப்.எம். கோல்ட், ரெயின்போ வானொலி ஆகியவற்றில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பிரதமர் அலுவலக இணையதளம் மூலமாகவும் இந்த நிகழ்ச்சியை காணலாம்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.