நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், கடந்த மன் மோகன் சிங் அரசு நாட்டுக்கு மிகப் பெரிய பாவத்தை செய்து விட்டது என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலக்கரி சுரங்க ஒதுக் கீடுகளில் நடந்த முறை கேடுகளால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி, வழக்கு டெல்லி சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி துறைக்கு பொறுப்பு வகித்த காலத்திலும், நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் மாவட்டம் ஹுசைனிவாலாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, ''கடந்த மன்மோகன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிலக்கரி ஊழலால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, உச்சநீதிமன்றம் இந்த பிரச்னையில் தலையிட்டது. இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, நாட்டுக்கு மிகப் பெரிய பாவத்தை செய்துவிட்டது.
204 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்துக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் சில நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டதில் நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் வருமானம் கிடைத்துள்ளது. இந்தபணம் ஏழைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.
மத்திய அரசு கொண்டுவர உள்ள நிலம் கையகப் படுத்தும் சட்டம் விவசாயிகளை வறுமையில் இருந்து போக்கும். விவசாயிகளின் குழந்தைகள் எப்போதும் டெல்லி, மும்பை நகரங்களின் குடிசைபகுதிகளில் தான் வாழ வேண்டுமா? இதற்கு யாராவது கண்டனம் தெரிவித்தார்களா? உண்மை என்னவெனில், விவசாயிகள் தங்களின் குழந்தைகள் அனைவரும் விவசாயம்தான் பார்க்க வேண்டும் என்று விரும்புவதில்லை. தவறான பிரச்சாரம் செய்பவர்களை விவசாயிகள் நம்ப வேண்டாம். மத்திய அரசு அனைத்து வகையிலும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும்" என்றார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.