பெங்களூருவில் ஏப்.2-ம் தேதி முதல் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடக்க விருக்கிறது. 3 நாள்கள் நடக்கும் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார்.
பாஜக தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் பெங்களூருவில் ஏப்.2-ம் தேதி முதல் 3 நாள்கள் நடக்கவிருக்கிறது. பெங்களூரு, அசோக் ஓட்டலில் நடக்க விருக்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். ஏப்.2-ஆம் தேதி தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் நடக்கவிருக்கிறது. ஏப்.3,4 ஆகிய தேதிகளில் தேசிய செயற் குழு கூட்டம் நடக்கிறது. 3 நாள்கள் நடக்கும் கூட்டங்களிலும் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்.2-ஆம் தேதியும், அமித்ஷா ஏப்.1-ஆம் தேதியும் பெங்களூருவுக்கு வருகை தருகிறார்கள்.
தென்னிந்தியாவில் கர்நாடகம், தமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ள பாஜக, மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக பெங்களூருவில் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.