முஸ்லிம் , கிறிஸ்தவ மதத்தை ஆதரித்தால் அதற்கு முற்போக்கு என்று பெயர்

 முற்போக்கு வாதிகள் என தங்களை கூறிக்கொள்பவர்கள், ஒவ்வொரு குற்றச் சம்பவத்துக்கும் மதச்சாயம் பூசுகிறார்கள் என ஆர்கனைசர். விமர்சனம் செய்துள்ளது.

இது தொடர்பாக, "ஆர்கனைசர்' இதழில் வெளிவந்த தலையங்கக் கட்டுரைகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

"நாட்டில் சிறு பான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை' என்ற கருத்து ஊடகங்களில் பிரபலமாகி விட்டது. முற்போக்குவாதிகள் எனக் கூறிக்கொள்பவர்கள், எந்தவொரு குற்ற சம்பவத்துக்கும் மதச்சாயம் பூச முயல்கிறார்கள். அவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரிந்தபிறகும், அவர்கள் அதே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.

ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, ஹிந்துமுஸ்லிம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்காக சிறு பான்மையினர்-பெரும்பான்மையினர் என்று சதிசெய்தனர்.

பாலின சமத்துவம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றம், கொடியகுற்றம் அல்லது சிறாருக்கு ஜாமீன் வழங்குவது, சாதிக் கொடுமைகள் அல்லது வகுப்புவாத வன்முறைகள், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை ரத்துசெய்வது அல்லது சட்டத் திருத்தம் கொண்டுவருவது ஆகிய விவகாரங்களில் முடிவில் பாதிக்கப்படுபவரை பொறுத்து, முற்போக்குவாதிகள் தங்கள் நிலைப்பாட்டை முடிவுசெய்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம், மும்பையில் தேவாலயத்தில் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் அரசையும், கலாசார அமைப்புகளையும் குறி வைத்து அவர்கள் விமர்சனம்செய்தனர்.

உண்மையில் அவர்கள் கலாசார ஒற்றுமையை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம் மதத்தையும், கிறிஸ்தவ அமைப்புகளையும் ஆதரிப்பவர்களுக்கு முற்போக்கு வாதிகள் என்று விளக்கம் தரப்படுகிறது. கூர்ந்துகவனித்தால், ஹிந்து மதத்துக்கும், ஹிந்து அமைப்புகளுக்கும் எதிராகச் செயல்படுவதையே முற்போக்கு சிந்தனை கூறப்படுவது தெரிய வரும் என்று அந்த தலையங்க கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...