மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலீடுசெய்ய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி யுடனான சந்திப்பின் போது இத்தகவலை அவர்கள் கூறினர்.
மேலும், இந்தியாவில் முதலீடுசெய்வதில் உள்ள விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினர். பாரிஸில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். யுனெஸ்கோ மையத்தில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதையடுத்து பிரான்சில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமைசெயல் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்காய்ஸ் ஹோலண்டே ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ''இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகிறது. மிகப்பெரிய சந்தையுடன் கூடிய நாட்டையும், வளர்ச்சிக்கு சாதகமான அரசையும் ஒரேயிடத்தில் பார்ப்பது அரிதானது. எனவே பிரான்ஸ் நிறுவனங்கள் எவ்விதபயமும் இன்றி இந்தியாவில் அதிகளவில் முதலீடுசெய்ய முன்வர வேண்டும். பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படும். 108 விமானங்கள் பிரான்ஸ் உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கபடும்'' என்றார்.
''இந்தியாவில் ரயில்வே, பாதுகாப்பு, அணு சக்தி துறை ஆகியவற்றில் பிரான்ஸ் நிறுவனங்கள் சுமார் 13 ஆயிரம்கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது'' என பிரான்ஸ் அதிபர் ஹோலண்ட் தெரிவித்தார். பிரான்ஸ் நிறுவனங்களின் தலைமைசெயல் அதிகாரிகள் அமைப்பின் தலைவர் பவுல் ஹெர்மெலின் பேசுகையில், ''இந்தியாவில் முதலீடுசெய்வதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால் முதலீடுசெய்யும் விதி முறைகளில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இது களையப்பட வேண்டும்.
தெளிவான, வெளிப்படையான சட்டத் திட்டங்களை உருவாக்க வேண்டும். முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்த விதி முறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மேக் இன் இந்தியா திட்டத்தில் முதலீடுசெய்ய விரும்புகிறோம். இந்தியாவில் பாதுகாப்பு, விமான போக்குவரத்து, எரி சக்தி, திடக்கழிவு மேலாண்மை ஆகிய துறைகளில் முதலீடு செய்வதென எங்கள் அமைப்பு முடிவுசெய்துள்ளது. இது குறித்த அறிக்கை இன்னும் ஒன்றரை மாதத்தில் சமர்ப்பிக்கப்படும்'' என்றார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.