“கால்பதித்த தேசியம் காலுன்றும்”

 ராம் மாதவ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக-பிடிபி கூட்டணி அரசு அமைவதற்கு முன் மாதக் கணக்கில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் முக்கிய பங்கு வகித்த பாஜக தேசிய பொதுச் செயலர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்துக்கள்:

பிரிவினைவாதி மஸ்ரத் அலம் என்பவரை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் விடுதலை செய்துவிட்டாரே?

பாஜகவும் மாநில அரசில் அங்கம் வகிப்பதால் இப்படிப்பட்ட ஒருதலைபட்சமான முடிவுகளை எதிர்க்க வேண்டியது எங்கள் கடமை. இந்த விவகாரம் குறித்து ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தலைமையில் மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்சியின் தேசியத் தலைவர் அமீத் ஷாவை சந்தித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். தேசப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பார்த்தால், மாநில அரசு மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இதுபோன்றதொரு பெரிய முடிவு எடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை.

உங்கள் கட்சி பிடிபியுடன் உறவைத் தொடர வேண்டியுள்ளது. இந்த நிலையில் கட்சி ஊழியர்களுக்கு என்ன சொல்லிக் கொள்வீர்கள்?

விஷயம் கட்சி ஊழியர்கள் பற்றி மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. இதுபற்றி அனைவரும் கவலை கொள்வது சகஜம். கட்சி ஊழியர்கள் போலவே பொதுமக்கள் மத்தியிலும் இந்த விடுதலை விவகாரத்தில் கடும் கோபம் ஏற்பட்டிருக்கிறது. மக்களின் உணர்வை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு புரிந்துகொள்வது அவசியம்.

இனி இதுபோல ஒரு சம்பவம் நடந்தால் பாஜக என்ன செய்யும்?

தேசிய பாதுகாப்பு குறித்து மக்களுக்கு கவலை ஏற்படுத்தும் விதத்தில் எதுவும் நடைபெறாமலிருக்க முழு முயற்சி செய்வோம். இனி எல்லாமே குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின்படிதான் நடைபெறும் என்று மக்களுக்கும் கட்சி ஊழியர்களுக்கும் உறுதி கூறிக் கொள்கிறேன். குறிப்பாக பிரிவினைவாத சக்திகளுக்கு ஊட்டமளிக்கும் விதத்தில் மாநில அரசு எந்தவொரு செயலும் செய்யாது.

குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் மாநில மக்களின் நலனுக்காக என்னென்ன சிறப்பு அம்சங்களை சேர்த்திருக்கிறீர்கள்?

மாநில அரசு அமைந்ததே பொது செயல்திட்டத்தின் படிதான். மாநில மக்களின் நலம் மட்டுமல்லாமல், தேசப் பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவை குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகலானாலும் சரி  காஷ்மீரிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்களானாலும் சரி, மாநில அரசு அனைவருக்கும் உரிய ஏற்பாடு செய்வது குறித்து கவனத்தில் கொள்ளும். சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பும் பொதுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த எல்லா விஷயங்களையும் அரசு பரஸ்பர கலந்தாலோசனைக்கு பிறகு செயல்படுத்தும்.

எதிர்கட்சிகள் முதலமைச்சர் சையீத் பாகிஸ்தான் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டுகின்றன. இதனால் பாஜகவுக்கு சங்கடம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஜம்மு-காஷ்மீர் பற்றி அவரவர் எண்ணப்படி தனித்தனி கற்பனை நிலவுகிறது. முதல் நாள் முதலமைச்சர் பேசியது உணர்ச்சிவசப்பட்டா அல்லது அது அவரது பாணியா? அவருக்குத்தான் வெளிச்சம். ஆனால் பாஜகவின் கொள்கை என்ன என்று அவருக்கும் தெரியும். ஆட்சி அதிகாரத்திற்காக தேசப் பாதுகாப்பு, சுயமரியாதை இவற்றில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அரசில் அங்கம் வகிக்கும் பிரமுகர்களும் சரி, எம்.எல்.ஏக்களும் சரி, பகிரங்கமாக கருத்து வெளியிடுவது என்றால் அது பொது செயல்திட்டத்திற்கு இசைவாகவே இருக்க வேண்டும் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டிவிட்டோம். இரு கட்சிகளுமே இதைக் கடை பிடித்தாக வேண்டும்.

பாஜக, பிடிபி இரண்டும் அரசியல் ரீதியாக எதிரெதிர் துருவங்கள். ஆட்சி ஆறு ஆண்டுகள் தாக்குப் பிடிக்குமா?

மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு ஆறு ஆண்டுகள் நீடித்தால் அது வரலாற்று முக்கியத்துவம் பெறும். தேசியக் கட்சியான பாஜக ஒரு மாநிலக் கட்சியுடன் கைகோர்த்திருக்கிறது என்றால் அது மாநில மக்களின் நலனுக்காகத்தான், மாநிலத்தின் வளர்ச்சிக்காகத் தான். குறுகிய கால ரீதியில் அல்ல, நீண்ட காலரீதியில் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி காண விழைகிறோம்.

பாஜக தலைமை தேசம் முழுமைக்கும் நல்லாட்சி, வளர்ச்சி ஆகியவற்றை அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு அது போல ஏதாவது கொள்கை அறிவிப்பு உண்டா?

பொது செயல் திட்டத்தில் 80 சதவீதம் வளர்ச்சி சமுதாய மனித ஆற்றல் பற்றி மட்டுமே அமைத்துள்ளோம். 10 சதவீதம் நல்லாசி பற்றியது: 10 சதவீதம் அரசியல் பற்றியது. ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும், அங்கே அமைதி நிலவ வேண்டும் இதுதான் நாங்களும் தேச மக்கள் அனைவரும்கூட ஆசைப்படுவது.  ஜம்மு மக்களையும் காஷ்மீர் மக்களையும் நெருக்கமாக்க முயற்சி செய்வோம்: தேசிய ஒருமைப்பாட்டிற்கு எடித்துகாட்டாக உருவாக்குவோம்.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி இரு முறை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது. வியூகம் வகுத்த அணியில் இருந்தவர் நீங்கள்: இதுபோல ஆகும் என்று எதிர்பார்த்தீர்களா?

தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை இவற்றில் ஒருபோதும் சமரசம் கிடயாது என்ற கருத்தை பிரதமர் அவையில் வலியுறுத்தினார். இது போல ஏதாவது சம்பவம் நடந்தால் விவாதம் தலைததூக்குவது இயல்பு தான். மாநிலத்தில் இது போன்ற விஷயங்களை கவனிக்கவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நல்லிணக்கக் குழு அமைத்திருக்கிறோம்: குறைந்தபட்ச பொது திட்டத்தின் படி அரசு நடப்பதற்கு இந்தக் குழு உரிய வழிகாட்டும். மத்திய அரசும் பாஜக தலைமையும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டியதிருக்காது. பாஜக,பிடிபி கட்சிகளின் மாநில பொறுப்பாளர்கள் மும்முன்று பேர் இடைவிடாமல் கலந்து பேசி பல்வேறு பிரச்சினைகளை மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள். அரசு சரியான படி தன் பணியை செய்ய இந்த ஏற்பாடு உதவும்.

பாஜக, பிடிபி இரு கட்சிகளுக்கும் அநேகமாக சம எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இருக்கும்போது முக்கியமான அமைச்சங்க்களை பிடிபி தன் வசம் வைத்துக் கொண்டது ஏன்? பாஜக தன் கூட்டணிக் கட்சியான பிடிபியுடனான ஒப்பந்தத்தில் பின்தங்கியது போல இல்லையா?

நிலவரம் அதுவே அல்ல. இரு கட்சிகளுக்கும் சம எண்ணிக்கையில் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்பது அமைச்சரவை அமைப்பதற்கான ஒரு பார்முலாவாக இரு பதவி பிடிபிக்கு, சபாநாயகர் பதவி பாஜகவுக்கு என்றும் முடிவு செய்யப்பட்டது: அநேகமாக அது போல நடந்திருக்கிறது.

எல்லா அமைச்சகங்களும் ஒன்று போல முக்கியமானவைதான். ஜம்மு-காஸ்மீர் மாநிலத்துக்கு 60-62 சதவீத அளவுக்கு உச்சபட்ச வருவாய் தருவது எரிசக்தித் துறை.அது பாஜகவிடம் உள்ளது. தொழில்துறை இன்னொரு பெரிய அமைச்சகம். அதுவும் பாஜகவிடம் உள்ளது. சுகாதாரம், நகர்புற வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அவையும் பாஜகவிடமே உள்ளன. பிடிபியிடம், உள்துறை, நிதி, வருவாய் ஆகிய மூன்று பெரிய துறைகள் உள்ளன. முதல்வரிடம் உள்ள உள்துறை உள்ளிட்ட அமைச்சங்களில் பாஜகவுக்கு துணை அமைச்சர்கள் பெற முயற்சி செய்தோம். அதுபோல பாஜக வசம் உள்ள துறைகளுக்கும் துணை அமைச்சர்கள் கேட்டிருந்தோம்.

பிடிபிக்கு பாஜகவை விட கேபினட் அமைச்சர்கள் இருவர் அதிகம் என்ற விஷயத்தைப் பொறுத்தமட்டில் அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின் பொது பாஜகவினர் இன்னும் இருவர் கேபினட் அமைச்சர்கள் ஆவார்கள். ஜம்முவையும் காஷ்மீரையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் போக்கை மாற்றி ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும் தேசத்திற்கும் நடுவே உள்ள இடைவெளியையும் நிரப்ப வேண்டியுள்ளது. மாநிலத்தில் ஜம்மு பகுதி மக்களும் லத்தாக் பகுதி மக்களும் என்றுமே தேசிய நீரோட்டத்தில் இணைந்தே இருந்துள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் சிறு சதவீதத்தினரே பிரிவினைவாத போக்கு உள்ளவர்கள்: அவர்களையும் நேர்வழிக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. ஜம்முவும் காஷ்மீரும் பரஸ்பரம் விலகிப் போய் உள்ளன. பதவி ஏற்கும் முன் முப்தி முகமது சயீது பிரதமரை சந்தித்த பொது இந்த தொலைவை குறைப்பதே தனது முதல் குறிக்கோள் என்று கூறினார். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு விமான மூலம் 20 நிமிடங்களில் போய்விடலாம்: பேருந்தில் போனால் 6 மணிநேரம்: அவ்வளவுதான்: ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக ஜம்முவையும் காஷ்மீரையும் உணர்வுபூர்வமாக ஒன்றுபடுத்த முடியாமலிருந்தோம் இந்த அரசு அந்தக் குறையை நீக்க முயற்சி மேற்கொள்ளும்.

நன்றி; விஜெயபாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...