நீதித்துறையில் பாஜகவின் தலையீடு இல்லை

 தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என, பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர ராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட பாஜக ஊழியர்கள் கூட்டம் அரூரில் திங்கள் கிழமை நடைபெற்றது.

இதில் தமிழிசை சௌந்தர ராஜன் பேசியதாவது:

தமிழகத்தில் 1967-ல் இருந்து ஆட்சிசெய்த திராவிட கட்சிகளால் ஊழல் மலிந்துள்ளது. இதற்கு மாற்றாக 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். பாஜக ஆட்சிக்குவந்தால் தமிழகம் வளம்பெறும்.

திமுக தலைவர் கருணாநிதி, பாமக.,வின் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் நீதித்துறையில் பாஜக தலையிடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நீதித்துறையில் பாஜகவின் தலையீடு இல்லை.

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குறைகூறுவது தவறு. சம்பவத்தைக் கேள்விப்பட்டதுமே உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆந்திர மாநில அரசுடன் தொடர்புகொண்டு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் குறித்தும் , அவர்களுக்காக குரல்கொடுக்காத சோனியா, ராகுல் காந்தி ஆகிய இருவரும் தற்போது விவசாயி களுக்காகப் போராட்டம் நடத்துவதாகக் கூறுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் விவசாயிகள் அதிகம்பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

காவிரியின் குறுக்கே புதியதாக மேக்கே தாட்டுவில் அணை கட்டுவதற்காக மத்திய அரசு எந்த வித அனுமதியும் அளிக்கவில்லை. இந்தபிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக இருக்கும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...