1962 இந்திய சீன போர் – சொல்லப்படாத உண்மைகள்

 பெரும்பாலான இந்தியர் களுக்கு அமெரிக்காவை இந்தியாவின் நண்பனாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இருப்பதில்லை. 1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்த போர் உதவிகள் அதற்கு முக்கியகாரணமாக இருக்கலாம். 1962 இந்திய சீன போரின் போது அமெரிக்கா இந்தியாவிற்கு அளித்த வெளிப்படையான, உறுதியான ஆதரவுபற்றி பெரும்பாலான இன்றைய இந்தியர்கள் அரிந்திராததும்

ஒருமுக்கிய காரணமாக இருக்கலாம். அன்றைய தினத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளித்திருக்கா விட்டால் அப்போரின் முடிவு இந்தியாவிற்கு தற்போது உள்ளதைவிட மிக மோசமாக இருந்திருக்கும்.

1962 – இந்திய சீன போரின் போது இந்தியாவுக்கு மிகவும் ஆதரவாக இருந்து சீனாவின் ஆக்ரமிப்பு வேகத்தை முடக்கியது அமெரிக்கா தான். இந்தியாவுக்கு ஆதரவாக USS Kitty Hawk போர் விமானத்தை வங்காளவிரிகுடா பகுதிக்கு அனுப்பவும் அமெரிக்கா தயாரானது. அதனாலேயே சீனா தானாக போர் நிறுத்தத்தை அறிவித்து பின் வாங்கியது. அக்காலக் கட்டத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி இந்தியர்களின் மனதில் மிகப் பெரும் ஹீரோவாக விளங்கினார்.

பட்டிதொட்டி எங்கும் அவரை இந்திய மக்கள் புகழ்ந்துபேசினர். சாதாரண பெட்டிக்கடைகளில் கூட கென்னடியின் புகைப்படங்கள் நேருவுடனும், காந்தியுடனும் காணப்பட்டன. 1963 நவம்பரில் கென்னடி கொலை செய்யப் பட்டவுடன், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். அவர் உலகமனித நேயத்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியர்களால் கருதப்பட்டார். போரின் போது நெருக்கடி நிலையினை கையாண்ட நேருவின் செயல்பாடு பதட்டம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் அதேசமயத்தில் கென்னடியின் செயல்பாடு அமைதியாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் அமைந்தது. அதுவே கென்னடியின் மதிப்பினை இந்தியர்களின் மனதில் பன் மடங்கு உயர்த்தியது.

இந்திய சீனப் போரை உலகின் மற்ற நாடுகள் அக்காலக் கட்டத்தில் ஒரு பொருட்டாக அல்லது மிக முக்கியமாக கருதவில்லை. ஏனென்றால் அப்போது கியூபா ஏவுகணை பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையே உருவான பகைமை உலகில் மிகப்பெரும் பதட்டத்தை உருவாக்கி உலக நாடுகளின் கவனிப்பை பெற்றிருந்தது.

ஆனால் இன்று சோவியத் ரஷியா சிதைவடைந்த நிலையில் கியுபா பிரச்சினை ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. ஆனால் இன்று இந்திய சீன எல்லை பிரச்சினை உலகின் அமைதிக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறி விட்டது. பிற்காலத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ராணுவமோதல் நடந்தால் அது உலக நாடுகளை பெரும்விதத்தில் பாதிக்கும் என்பது நூறுசதம் உண்மை. இந்திய சீனப் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வைகளில் இந்தியாவில் உள்ள கம்யுனிஸ்ட் இயக்கங்களும் ஒன்று. அதுவரை காங்கிரசுக்கு அடுத்த படியாக இந்தியாவில் வலுவாக காலுன்றியிருந்த கம்யுனிஸ்ட் இயக்கங்கள், அதற்குப்பின் இந்தியாவில் தலை தூக்கவே முடியவில்லை. இந்தியாவில் கம்யுனிசம் வெற்றி  பெற்றிருந்தால், அது அமெரிக்க ரஷிய நாடுகளிடையே நடந்த பனிப் போரின் முடிவை வேறுவிதமாக மாற்றியிருக்கலாம்.

உண்மையில் 1962 – ல் கென்னடி கியுபா பிரச்சினையில் தான் தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தினார். இந்திய சீனபோர் பிரச்சினையை கையாளும் அதிகாரத்தை அவர் அப்போதைய அமெரிக்க தூதர் பேராசிரியர் ஜான் கேல்ப்ரைத் என்பவரிடம் ஒப்படைத்தார். போரில் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமானபோது பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த அமெரிக்க விமானப் படைகள் உஷார் செய்யப்பட்டன. வார்சாவில் இருந்த அமெரிக்க தொடர்புகளின் மூலம் சீனா கடுமையாக எச்சரிக்கப் பட்டது. சீனாவின் ஆக்கரமிப்பு நடவடிக்கை தொடருமானால், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் இறங்கும் என்று சீனாவிடம் அமெரிக்கா உறுதியாக தெரிவித்தது. வெறும் அறிவிப்போடு நிற்காமல் அமெரிக்க விமானப் படையின் C-130 ஹெர்குலிஸ் போர் விமானம் போர்க் களத்தில் நின்ற இந்திய வீரர்களுக்கு ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும், தேவையான உடைகளையும் சப்ளை செய்தது.

 அப்படியானால் அப்போது இந்தியாவின் நண்பனாக கருதப்பட்ட சோவியத் ரஷியா என்ன செய்து கொண்டிருந்தது. அது இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்தசம்பவம் ஆகும். இந்தியாவின் நம்பிக்கைக்கு நேர் எதிராக சோவியத் இந்தியாவை கைவிட்டது. போர் ஏற்பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று சோவியத் குற்றம்சாட்டியது. மேலும் போரின் போது சீனாவின் இந்திய ஆக்கரமிப்பு நடவடிக்கையை சோவியத் ஆதரித்தது. ஏற்கனவே போரின்தோல்வியால் ஏமாற்றமடைந்து, தனித்து விடப்பட்டு, நொந்துபோயிருந்த இந்தியாவுக்கு, சோவியத்தின் வெளிப்படையான சீன ஆதரவு கொள்கை நிலை மேலும்பேரிடியாக அமைந்தது.

1962 –ல் அமெரிக்க ரஷியபோர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உச்சக்கட்டத்திலிருந்த நேரம். அக்டோபர் 25, 1962 அன்று சோவியத் பத்திரிகை ப்ரவ்தா தனது முதல்பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் இந்திய சீன போருக்கு இந்தியாவே காரணம் என்று குற்றம்சாட்டியது. இந்திய சீன எல்லை கோடான மெக்மோகன் கோடு நியாயமற்றது என்றும், அது பிரிட்டிஷ் ஏகாதிபத் தியத்தின் திணிப்பு என்றும், அந்த எல்லைக்கோடு சட்டப்படி செல்லாது என்றும் அப்பத்திரிகை செய்திவெளியிட்டது.

இந்தியா ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று அது மேலும் குற்றம்சாட்டியது. ஆனால் சோவியத்தின் இந்த நம்பிக்கை துரோகசெயலுக்கு நேர்மாறாக கென்னடியின் இந்திய ஆதரவு நிலை இருந்து. இந்தியாவுக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் அமெரிக்கா எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தனது உதவியை அளித்தது. அதுவே இந்தியர்களின் மனதில் கென்னடி மிகப் பெரும் இடத்தை அடைய ஒரு காரணமாக அமைந்தது.

அமெரிக்க தூதர் பேராசிரியர் கேல்பிரித் தன்னிடம் பேசும்போது, அக்காலக்கட்டத்தில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து டெல்லியில் நிலை கொண்டிருந்ததாகவும், அவைகள் இந்திய திபெத் எல்லை பகுதிகளை தொடர்ந்து புகைப் படம் எடுத்து இந்தியாவிற்கு வழங்கியதாகவும் தெரிவித்தாக ஓய்வுபெற்ற col. அனில் அதாலே தெரிவிக்கிறார். ஏனென்றால் அப்போது இந்திய சீன எல்லைப்பகுதி குறித்த எந்த வரை படமும் இந்தியாவிடம் இருக்கவில்லை.

அமெரிக்க விமானங்கள் வழங்கிய புகைப் படங்கள் இந்தியாவிற்கு மிகப் பெரும் உதவியாக இருந்தது. அமெரிக்காவின் இந்த உதவிகள் காரணமாக அன்றைய காலக் கட்டத்தில் இந்திய அமெரிக்க நட்புறவு வலுவான நிலையில் இருந்தது. ஏனென்றால் நண்பனின் துரோகத்தால் துவண்டிருந்த இந்தியாவிற்கு அமெரிக்காவின் எதிர்பாராத உதவி உயிர்காக்கும் மருந்தாக அமைந்தது.

நவம்பர் 16, 1962 –அன்று சீனா தானாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. அதுமட்டுமில்லாமல் அருணாச்சலப்பிரதேசத்தில் தான் ஆக்ரமித்த பகுதிகளைவிட்டு பின் வாங்குவதாகவும் அறிவித்தது. அளவுக்கு மீறி இந்தியாவின் இமயமலைப் பகுதிக்குள் ஊடுருவியதால், அப்பகுதிகளை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்து சீனா பின்வாங்கியது உண்மைதான். ஆனால் அமெரிக்க விமானப்படையின் தலையீடும், வார்சா விலிருந்து அமெரிக்காவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் சீனாவின் பின்வாங்கலுக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்ததை எவரும் மறுக்கமுடியாது.

ஆனால் இந்திய அமெரிக்க உறவு அடுத்த ஒருவருடத்தில் கசந்துபோகத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆதரவுடன் பாகிஸ்தான் அளித்த நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் இந்திய ஆதரவுபோக்கு மாறத்தொடங்கியது. ஆனால் தற்போது இந்திய அமெரிக்க நட்புறவு மீண்டும் மேம்படத் தொடங்கியுள்ளது.

இப்போதைய உலக அரங்கில் இந்திய அமெரிக்க நட்புறவு மேம்படுவது இந்தியாவிற்கு நலத்தை தரும். எந்த நாடும் பிரதிபலன் பார்க்காமல் நட்பு கரத்தை நீட்டுவதில்லை. அமெரிக்காவிடம் இருந்து சில உதவிகளை நாம் பெறும்போது, நாம் சில உதவிகளை அவர்களுக்கு வழங்குவது தவறல்ல. உலக அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளை ராஜதந்திரமாக பயன்படுத்துவதின் மூலம் உலக அரசியலில் நாம் சிறந்த லாபங்களை பெற முடியும். மேலும் ஆசியாவின் மிகப்பெரும் ஆபத்தான சீனாவை எதிர்கொள்ள நம் கையில் அமெரிக்கா என்னும் ஆயுதம் கண்டிப்பாக தேவை. அதேபோல் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஏகாதிபத்தியத்தை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி அமெரிக்காவிற்கு தேவை. எனவே இந்திய, அமெரிக்க நட்புறவு இரு நாடுகளுக்கும் பலனைத் தரக்கூடியதாகும். சிறு சிறு அரசியல் லாபங்களுக்காக அமெரிக்காவை விமர்சித்துக்கொண்டிருக்காமல், அமெரிக்காவிடம் வெளிப்படையாக நட்பு கொள்வதே எதிர்காலத்தில் இந்தியாவிற்கு நலம் பயக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...