உள்நாட்டில் கப்பல் பழுதுபார்க்கும் துறையில், 2,700 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகவாய்ப்புகள் உள்ளது என, மத்திய கப்பல் போக்கு வரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பார்லிமென்டில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் கப்பல் பழுதுபார்க்கும் துறையில், 2,700 கோடி ரூபாய் அளவிற்கு தொழில்வாய்ப்புகள் இருந்த போதிலும், பல்வேறு சிக்கல்களால் அத்துறையின் விற்று முதல் படிப்படியாக சரிவடைந்து வருகிறது.உள்கட்டமைப்பு அந்தஸ்தில், கப்பல் பழுபார்க்கும் துறை இல்லாத காரணத்தால், குறைந்தவட்டி மற்றும் நீண்டகால அடிப்படையில் நிதி உதவிபெறுவதில், அத்துறை நிறுவனங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துவருகின்றன.
எனவே, மத்திய அரசு, இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க தேவையான பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது. இத்துறையில் நிறுவனங்கள் எளிதாக வர்த்தகம்புரிய ஏதுவாக, இயக்குனர் ஜெனரல் (கப்பல்) அமைப்பில் பதிவுசெய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அயல் நாட்டு கப்பல் பழுதுபார்க்கும் செலவை குறைக்கும் நோக்கில், அதற்கான சேவை வரியில் இருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.