கடந்த 2014 பொதுத்தேர்தலுக்கு பின்னர், இந்தியாவில் மத ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், 2014 தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான அவதூறு விமர்சனங்கள், வன்முறை தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமையிலான கட்டாயமதமாற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
இவை ஆளும பாஜக அரசியல்வாதிகள் ஆதரவுடன் நடக்கின்றன, என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் சிறு பான்மையினர் மீதான சகிப்புத் தன்மை குறைந்து வருவதுதொடர்பாக அதிபர் ஒபாமா இந்திய அரசுக்கு அழுத்தம்கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாள விகாஸ்ஸ்வரூப் கூறும் போது, அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான ஆணையம், இந்திய மதச்சுதந்திரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை நம் கவனத்துக்கு வந்துள்ளது. கடந்த 30-ம் தேதி அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை ஆராய்ந்த போது, இந்தியா மீதான் குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாது, இந்திய சமூகம், அரசியல் சாசனம் பற்றி தெளிவானபுரிதல் இல்லாமல் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை, எனத் தெரிவித்துள்ளார்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.