பிரான்சிடமிருந்து, 'ரபேல்' ரக போர் விமான ங்களை வாங்குவது தொடர்பான பேச்சு, விரைவில் துவங்கவுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் மனோகர்பாரிக்கர் கூறினார்.
பிரான்சிடமிருந்து, அதி நவீன ரபேல் ரக போர் விமான ங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், 2007ம் ஆண்டிலேயே, இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே கையெழுத்தானது. ஆனாலும், விலைநிர்ணய விஷயத்தில் இழுபறி நீடித்ததால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வில்லை. இந்நிலையில் சமீபத்தில், பிரதமர் மோடி பிரான்சுக்கு சுற்றுப் பயணம் செய்த போது, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. முதற்கட்டமாக, 36 விமானங்களை தர, பிரான்சு முன் வந்தது. இந்நிலையில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது: பிரான்சு ராணுவ அமைச்சர் ழான் யுவேஸ் லி டிரெயன், அடுத்தவாரம் இந்தியா வருகிறார். அப்போது, ரபேல் போர் விமானங்கள் குறித்து பேச்சு நடக்க வுள்ளது. பேச்சை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க, அரசு திட்ட மிட்டுள்ளது. இதை யடுத்து, பிரான்சிடமிருந்து, 36 விமானங்கள் நமக்கு தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.