ஊழலை சுட்டிக் காட்ட, காங்கிரஸுக்கு உரிமை உண்டா

 ஊழலை சுட்டிக் காட்ட, காங்கிரஸுக்கு தார்மீக உரிமை உண்டா என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திருப்பூரில் கேள்வி எழுப்பினார்.

மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூரில் நடந்தது. இதில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக தமிழகத்தில் ஒரு மிகப் பெரிய மாற்று சக்தியாக வளர்ந்து வருகிறது. இரண்டு கழகங்களுக்கு இடையே, வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி தான் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

வரும் 16-ம் தேதி, 'தமிழக மக்களோடு மத்திய அரசு' என்ற புதியதிட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்துகிறார். இதில், மத்திய அமைச்சர்கள் 29 பேர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறார்கள். தமிழகமக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும், அதை மத்திய அரசு பரிசீலிக்கும் தொடக்க நிகழ்வு அது.

வாரந் தோறும் சனிக்கிழமைகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசு சம்பந்தமான கோரிக்கைளை பொது மக்கள் அளித்தால், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து, நிவர்த்தி செய்யப்படும். தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்களில், 29 மத்திய அமைச்சர்கள், 3 மாநில முதல்வர்கள் என 32 பேர் தமிழக மக்களை சந்திக்க வருகிறார்கள். திருப்பூருக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் வர இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஊழலை சுட்டிக் காட்டிய வகையில் மகிழ்ச்சி. ஆனால், அதற்குகூட காங்கிரஸூக்கு தார்மீக உரிமை உண்டா? என்பது மிகப் பெரிய கேள்வி. 2 ஜியில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம்சொல்கின்றனர். காங்கிரஸை மக்கள் நம்பமாட்டார்கள்.

நிலம் கையகப்படுத்தல் மசோதா, விவசாயிகளுக்கு பாதுகாப்பான மசோதா ஆகும். ரியல் எஸ்டேட் மசோதா குறித்து ராகுல் பேசுகிறார்.

அவர், விடு முறையில் இருந்து, இன்னும் விடுபட வில்லை. அது, ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்தரும் மசோதா. சாலை பாதுகாப்பு மசோதாவில், வாகன ஓட்டிகளின் உயிருக்கு பாதுகாப்புள்ளது. இரண்டொரு நாட்களில் வரவுள்ள நீர்வழிப்பாதை மசோதா உள்ளிட்ட ஒவ்வொரு மசோதாவிலும் உள்ள சின்னஞ்சிறிய குறைகளை ஊதிப் பெரிது படுத்துகிறார்கள்.

சாலை பாதுகாப்பு மசோதா என்பது பசுத்தோல் போர்த்திய புலி என கருணாநிதி சொல்லியுள்ளார். அது, புலித்தோல் போர்த்திய பசு. தமிழக அரசு முற்றிலும் முடங்கிப்போய் கிடக்கிறது. முடங்கிக்கிடக்கும் அரசுக்கு, வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...