பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு தூய்மை இந்தியா திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன்படி கங்கையை தூய்மைப் படுத்தும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளார்.
மேலும் நாம் வசிக்கும்தெருவை நாமே சுத்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவரே நேரடியாக களம் இறங்கி தெருவை சுத்தப் படுத்தினார். இதற்கு நாடுமுழுவதும் அமோக வரவேற்பு இருந்தது. இதனை பின்பற்றி மத்திய அமைச்சர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெருவை சுத்தம்செய்ய களம் இறங்கினர்.
இந்நிலையில் "தூய்மை இந்தியா " திட்டத்தை பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்ததிட்டத்துக்கு ரூ.1 கோடி மற்றும் அதற்குமேல் நன்கொடை அளிக்கும் தனிநபரும், ரூ.20 கோடிக்கு அதிகமாக நிதிவழங்கும் நிறுவனங்களும் நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தனிநபரும், ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை நிறுவனங்களும் நேரடியாக நிதியமைச்சர் அருண்ஜேட்லியிடம் வழங்கலாம்.
இந்த அறிவிப்பின் மூலம் தூய்மைஇந்தியா திட்டத்துக்கு நிதிகுவியும் என மத்திய அரசு நம்புகிறது. வருகிற 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மை நாடாக மாற்றவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இந்தநிதியை பெண்களுக்கு பொதுகழிப்பறை கட்டுவது, பள்ளிகளில் மோசமான நிலையில் உள்ள கழிப்பறையை புதுப்பிப்பது, பொதுசுகாதாரத்தை பேணி காப்பது, தெருக்களை சுத்தமாக வைத்துகொள்வது போன்றவற்றுக்காக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு மனிதநேயம் கொண்ட தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் நன்கொடையை வாரிவழங்க வேண்டும் என்றும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய நிதியை பாரதஸ்டேட் வங்கி மூலம் காசோலை, வரைவோலை, கடன் அட்டை போன்றவற்றின் வாயிலாகவும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.