மங்கோலியா பொருளாதாரத்தை உயர்த்தவும், அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்தியா ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 3 நாள் சீனப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு, மங்கோலியா சென்றுள்ளார். பிரதமர்க்கு தலைநகர் உலான் பாட்டர் நகரத்தில் உள்ள சிங்கிஸ்கான் சர்வதேச விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி மங்கோவிலியாவின் உலான் படோரில் உள்ள மட ஆலயம் சென்று வழிபாடுசெய்தார். பின்னர் மங்கோலிய பிரதமர் சிம்மெட் சைக்ஹான் பிலெக்-கை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி – சிம்மெட் சைக்ஹான் பிலெக் தலைமையில் இரு நாட்டு பிரநிதிகள் குழுகூட்டம் நடைபெற்றது. இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: –
மங்கோலியாவிற்கு வந்ததில் நான் மிகவு மகிழ்ச்சியாக உள்ளேன். முதல் முறையாக மங்கோலியாவிற்கு வந்த முதல் இந்திய பிரதமர்க்கு ஒரு பெரிய மரியாதை இருக்கிறது. உங்களுடைய வரவேற்பு மற்றும் உபசரணை என்னுடைய நெஞ்சை தொட்டு விட்டது, மங்கோலியா எங்களுடைய மிகவும் நெருங்கிய நட்பு நாடு . ஆன்மீக அண்டைய நாடும் ஆகும். எங்களுடைய பொறுப்பு அனைத்தையும் நாங்கள் நிறைவு செய்வோம்.
இந்தியா சட்டத்தின் கிழக்கு கொள்கைக்கு ஒருங்கிணைந்த பகுதியாக மங்கோலியா அங்கம்வகிக்கிறது. இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத் தன்மையை உருவாக்க நாம் இணைந்து பணியாற்ற முடியும்.
நாம் நமது பொருளாதார நட்புறவை புதியநிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும். "மங்கோலியாவின் பொருளாதாரத்தை உயர்த்தவும், அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தவும் இந்தியா ரூ.6 ஆயிரம் கோடி கடன்வழங்கும்". பாதுகாப்பு பயிற்சிகளில் இரு நாடுகளும் தொடர்ந்து கலந்துக் கொள்ள வேண்டும். நாம் இன்று செய்துக்கொண்ட ஒப்பந்தம், எல்லை மற்றும் சைபர்பாதுகாப்பில் ஒத்துழைப்பை ஆழமாக்கும். மங்கோலியாவின் பாதுகாப்பு மையத்தில் சைபர்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது. இருநாட்டிலும் உள்ள பொருளாதார வளர்ச்சியனது, புதிய வாய்ப்புகளுக்கான தொடக்கம் ஆகும். என்று கூறினார்.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.