பா.ஜ.க, தேசிய தலைவர் அமித்ஷா கேரளாவில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'ஊழல் அற்ற ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துவருகிறார். எதிர் கட்சிகளால் ஒரு ஊழல்புகாரை கூட கூற முடியவில்லை.
இந்தியாவில் பிரதமராக, நரேந்திரமோடி பொறுப்பேற்ற பின்பு, பல்வேறு சோதனைனைகளில் இருந்து இந்தியா மீண்டுவருகிறது. பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுவருகிறது.
சமீபத்திய ஓராண்டு ஆட்சியில் 14 கோடிபேருக்கு வங்கிகடன் வெற்றிகரமாக துவக்கியுள்ளோம். நேரந்திர மோடி தலைமையின் கீழ் அறிவுதிறன் வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். தொழில் முனைவோர்களை உருவாக்க முடியும்.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசில் ஒரு ஊழல்புகார் கூட , கூற முடியாது. அந்த அளவு நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறுகிறது. மக்கள் நலனைமட்டும் இந்த அரசு சிந்திக்கின்றது. மற்றவைகளை கனவில்கூட நினைப்பது இல்லை.
ஆனால், கடந்த 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது? நாட்டு நலன் அனைத்தும் வீணாணது. நாடே ஊழல்காரணமாக நாசமானது. காங்கிரஸ் அரசு தான் எல்லா ஊழலுக்கும் துணைபோனது.
கேரளாவில் பார் நடத்துவதில் அமைச்சர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர். லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் மீது மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். உம்மன்சாண்டி அரசு ஊழல்கள் நிறைந்த அரசாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி, மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 12 லட்சம் கோடி என்ற அளவில் ஊழல் நடந்துள்ளது என்றார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.