தீவிரவாதிகளை ஒடுக்கும்பணியில் பாகிஸ்தான் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்'' என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
உபி மாநிலம் லக்னோவில் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தீவிரவாதத்தால் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தீவிரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முழுஅளவில் ஒத்துழைப்பும் உதவியும் அளிக்கவேண்டும்'' .
''தீவிரவாதத்தை தீவிரவாதம் மூலமே வேரறுப்போம்'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சில நாட்களுக்கு முன்னர் ஆவேசமாக கூறினார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஸிஸ் எதிர்ப்புதெரிவித்தார். ''அமைச்சர் பாரிக்கரின் பேச்சு தீவிரவாதத்தை இந்தியாவே தூண்டிவிடுகிறது என்ற பாகிஸ்தானின் சந்தேகத்தை உறுதிசெய்கிறது'' என்று சர்தாஜ் கூறினார்.
இதுகுறித்து ராஜ்நாத்சிங் கூறும்போது, ''தீவிரவாதத்தை தூண்டி விடுவது யார் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகுக்கே தெரியும்''.
போலி இந்திய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட்டு தீவிரவாதத்தை தூண்டி விட தொடர்ந்து முயற்சி நடக்கிறது. போலிகரன்சி நாட்டுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்தவிஷயத்தில் வங்கிகள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்கவும், கள்ளநோட்டுகள் புழக்கத்தை தடுக்கவும் எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துவருகிறது.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பு போல இருப்பவை வங்கிகள். சுதந்திரத்துக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வங்கிகளை தேசிய மயமாக்கும் மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், வங்கிகளுக்கும் மக்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதில் குறைஇருந்தது. இப்போது, ஜன்தன் திட்டத்தின் மூலம் 15 கோடி குடும்பங்களை வங்கி வாடிக்கை யாளர்களாக சேர்த்துள்ளோம். இது சாதாரண விஷயமல்ல. இதற்காக வங்கிகளை பாராட்டுகிறேன்.
சமூக பாதுகாப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். எங்களை விமர்சிப்பவர்கள், விரைவில் எங்கள் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலனை புரிந்துகொள்வார்கள். மோடியின் திட்டங்களை சர்வதேச நிதியமும் (ஐஎம்எப்) பாராட்டியுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்த பட்சம் 10 சதவீதமாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.
உள்கட்டமைப்பு திட்டங்களை செயல் படுத்தியதால் இப்படித்தான் வாஜ்பாய் ஆட்சியின் போது, 10.4 சதவீதமாக உயர்ந்தது. கறுப்புப்பண புழக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளாலும், நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.