IIT பெயரைப் பயன்படுத்தி தங்கள் சொந்த கருத்துக்களை வெளியிட்டதால்; தான் ஒரு குறிப்பிட்ட மாணவ அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டதென்று IIT மாணவர் விவகாரங்களுக்கான Dean திரு. சிவகுமார் சீனிவாசன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். மேலும் IIT வளாகத்தில் கருத்து
சுதந்திரத்திற்கு எவ்வித தடையுமில்லை என்றும் கூறியிருக்கிறார்;. ஆக இது தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமான IIT Madras ல் அங்கே உள்ள சூழ்நிலை காரணமாக எடுக்கப்பட்ட முடிவு.
மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிருத்தி இராணி அவர்களும் இதே கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்கள்;. நாமெல்லாம் பெரிதும் மதிக்கக்கூடிய தலைவர்களின் பெயரை பயன்படுத்தி வேண்டுமென்றே சிலர் உள்நோக்கத்தோடு சில கருத்துக்களை பரப்புவதற்கு அந்த கல்வி நிறுவனம் போட்ட தடையை ஏதோ இந்த தலைவர்களின் கருத்திற்கே எதிராக மத்திய அரசு செயல்படுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இந்த நடவடிக்கைகளோடு காரணமே இல்லாத மத்திய அரசை வேண்டுமென்றே பழி சுமத்தி, அரசியலாக்கி மாணவர்கள் கல்வி பயில வேண்டிய வளாகத்தை அரசியல் வளாகமாக மாற்றுவதற்கு பல கட்சிகள் முயற்சி செய்வதில் மாணவர்கள் எந்த விதத்திலும் பலியாகிவிடவும் கூடாது பாதிக்கப்பட்டும் விடக் கூடாது.
வேண்டுமென்றே மாணவர்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூண்டி அவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாமென்று இப்பிரச்சனையை திசை திருப்பி அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கும் கட்சிகளிடமும், இயக்கங்களிடமும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
மாணவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எவ்விதத்திலும் தடையில்லை என்று IIT நிர்வாகம் தெளிவுபடுததியுள்ளது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு மட்டுமல்ல பல அமைப்புகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. கருத்து பரிமாற்றமும் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது.
ஆனால் உள் நோக்கத்துடன் செயல்படுவதையும் சொந்த கருத்துகளை IIT நிறுவனத்தின் கருத்து என்றவொரு தோற்றத்தை ஏற்படுத்துவதால் தான் இந்த குறிப்பிட்ட அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதையும் IIT நிறுவனம் மிகச் சரியாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதனால் இதிலுள்ள உண்மை நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் திரு. ராகுல்காந்தி குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையானது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. அவசர நிலை என்ற நிலை ஒன்றை ஏற்படுத்தி இந்த நாட்டின் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரித்தவர்கள் அவர்கள் ஆண்ட காலத்தில் அக்கட்சியின் தலைவர்களை எதிர்த்து கருத்துக்களை பதிய வைத்த மாணவர்களைக் கூட கைது செய்தவர்கள் இவர்கள். அதற்கு கடுமையான கட்டுபாடு வகித்தவர்களும் இவர்கள் தான். அதனால் திரு. ராகுல்காந்தியோ இங்கே இளங்கோவனோ இதனை அரசியலாக்கி குளிர் காய்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கே உள்ள மற்ற அமைப்பினரும் கட்சி தலைவர்களும்; இதை வேண்டுமென்றே அரசியலாக்கி தங்கள் கல்விபாதையில் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதை IIT மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அரசியல் தூண்டுதல்கள் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்க கூடாது என்பதையும் அவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் மக்கள்;; பணியில்
(DR. தமிழிசை சௌந்தரராஜன்)
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.