போபால் விஷ வாயு சம்பவத்தின் குற்றவாளி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன்-ஆன்டர்சனை பிடித்து தரும்படி கேளுங்கள் என்று , பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கடிதம் எழுதியுள்ளார்.
போபால் விஷவாயு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி வாரன் ஆன்டர்சன் தற்போழுது அமெரிக்காவில் இருக்கின்றார் . விசாரணைக்கு அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது. சட்டத்தினுடைய பிடியிலிருந்து தப்பித்து வருகிறார். விஷ வாயு சம்பவத்தில் பாதிக்க பட்டவர்களுக்கு 1984 -ம் ஆண்டு முதல் அநீதி இழைக்கபட்டு வருகிறது. தற்போழுது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, வாரன்ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை செய்ய வேண்டும். ஆன்டர்சனை பிடித்து தரும்படி அதிபர் ஒபாமாவிடம் கேட்கவேண்டும். மத்திய பிரதேச மக்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் விததில் இப்பிரச்னையில் தலையிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவிவித்துள்ளார்
போபாலில் ஏற்ப்பட்ட மீதைல் ஐசோசைனைடு என்ற விஷ வாயு கசிவில், 15 ஆயிரம் பேர் இறந்தனர், 2259 பேர் இறந்ததாக அரசுதரப்பில் கூறப்படுகிறது
ஆயிரகணக்கான கால்நடைகளும் விஷவாயு தாக்கி பலியாயின; 5 லட்சம் பேர் பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.